இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி குவியும் - உங்க ராசிக்கு என்ன பலன்?
பிப்ரவரி 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.

Published : February 24, 2026 at 7:12 AM IST
மேஷம்: இன்றைய தினம் நீங்கள் அனைத்து வகையிலும் முழுமையான சுதந்திரத்தை விரும்புவீர்கள். இளைஞர்கள் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவார்கள். பொதுவாக, குடும்ப விவகாரங்கள் இன்று ஆதிக்கம் செலுத்துகின்றன.
ரிஷபம்: இன்று நீங்கள் மிகவும் சுயநலத்துடன் நடந்து கொள்வீர்கள். இது உங்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற உணர்வை கொடுக்கக்கூடும். மற்றவர்களை கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் போக்கு உங்களிடம் காணப்படும். இதனால், முக்கிய உறவுகள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
மிதுனம்: இன்று நீங்கள் தனிமையில் இருப்பது போல் உணரக்கூடும். குழப்பமான மனநிலையிலிருந்து வெளி வர மற்றவர்களின் உதவியை நாடலாம். தியானம் மற்றும் யோகா செய்வதன் மூலம் மனதிற்கு அமைதி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கடகம்: இன்று, உங்களுக்கு ஒரு அற்புதமான நாளாக இருக்கும். உங்களுக்கு சிறந்த எண்ணங்கள் தோன்றும். உங்கள் புகழும் அதிகரிக்கும். மக்கள் உங்கள் முயற்சிகளை போற்றுவார்கள். இன்று ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் வெற்றிகரமான நாளாக இருக்கும்.
சிம்மம்: இன்று உங்கள் பணியிடத்தில் முன்னேற்றத்தை காண்பதற்காக கடுமையாக உழைப்பீர்கள். தீர்வுகளைக் காண்பதில் மிக வேகமாக செயல்படுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை புரிபவர்களும் மந்தமாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். பணியில் மூத்தவர்கள் உங்கள்மீது திருப்தியடைவார்கள்.
கன்னி: இதுவரை நீங்கள் அடைத்து வைத்திருந்த உணர்வுகள், வெளி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு சொந்தமானவைகள் மீது, பற்றையும் பாச உணர்வையும் வளர்த்துக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய சுற்றுச்சூழல் சாதமாக இல்லையென்றால் அமைதியின்மை ஏற்படலாம்.
துலாம்: இன்று கலைகள் மீது ஆர்வம் ஏற்பட்டால் ஆச்சரியப்பட வேண்டாம். நட்சத்திரங்கள் உங்களுக்கு அனுகூலமாக இருந்து, அழகியல் தொடர்பான அனுபவங்களைக் கொடுக்கும். இதன் விளைவாக, வீட்டை அலங்கரிக்க விரும்புவீர்கள்.
விருச்சிகம்: புதிய கூட்டு முயற்சித் திட்டம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவீர்கள். நீங்கள் எடுத்த முயற்சிகளுக்கு தற்போது பலன் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் விரைவில் நிலைமை சீராகும்.
தனுசு: ஆலோசனையைப் பெறுவதற்கு தயாராக இருங்கள். அவற்றை உதாசீனப்படுத்தாதீர்கள். ஆனால் முடிவு உங்கள் கையில் இருக்க வேண்டும். மேலும் தீவிரமாக யோசித்து சரியான முடிவு எடுப்பது நல்லது.
மகரம்: இன்று, அயல்நாட்டு கல்வி, மேற்படிப்பிற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று லாபகரமான நாளாக அமையும்.
கும்பம்: உங்கள் வெற்றிக்கு குறுக்கு வழி கிடையாது. ஆகையால் கடினமாக உழைத்தல் அவசியம். சக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உங்கள் முயற்சியை பாராட்டுவார்கள். பயத்தை விட்டால் மட்டுமே விரும்பும் வெற்றி கிட்டும் வாய்ப்பு உள்ளது.
மீனம்: எதிர்பாலினத்தவருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். இந்த நாள் உங்களுக்கு சிறந்த நாளாக அமைய பெறலாம். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் நேரத்தை செலவிடுவீர்கள். காதல் துணையை தேடுபவராக இருந்தால் நெடு நாட்களாக ரசித்தவரின் மனதை வெல்ல ஏற்ற நாள் இது.

