ETV Bharat / spiritual

இன்று காதல் உறவு கைகூடும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? உங்களது ராசிக்கான பலன் என்ன?

ஜூன் 1ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 1, 2026 at 7:04 AM IST

2 Min Read
Choose ETV Bharat

மேஷம்: எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னால், சிந்தித்து செயல்பட வேண்டும். அவசர முடிவுகள், நீண்ட கால கடும் உழைப்பினால் ஏற்பட்ட முன்னேற்றத்தை பெரிதும் பாதிக்கும். இன்று மாலையில் குழந்தைகளுடன், நேரம் செலவு செய்வீர்கள்.

ரிஷபம்: உங்களுக்கு தொடர்ந்து துன்புறுத்தல் கொடுத்து வந்த ஒருவரை இன்று நீங்கள் சந்திக்க நேரிடலாம். உங்களது எதிர்கால நலனை கருத்தில்கொண்டு, அவருடன் மோதல் நடவடிக்கை மேற்கொள்ளாமல், அமைதியாக செயல்படவும். மற்றவர்களால் பொறுமை இழக்காமல் இருப்பது நல்லது.

மிதுனம்: இன்று நீங்கள் தொழிலை விட, உடல்நலத்தின் மீது அதிகம் கவனம் செலுத்தவேண்டிய தேவை உள்ளது. உடற்பயிற்சி செய்ய கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வீர்கள். சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரத் துறையில் இருப்பவர்களுக்கு சிறந்த நாள் இது. உங்களது சிறந்த மார்க்கெட்டிங் உத்தி மூலம், அதிகபட்ச லாபத்தை ஏற்படுத்த முடியும்.

கடகம்: இன்றைய பொழுதை உற்சாகமாக தொடங்குவீர்கள். உங்கள் ஆர்வத்தை யாராலும் தடுக்க முடியாது. நீங்கள் செல்லும் இடத்திலும், பிறரை மகிழ்ச்சி படுத்துவீர்கள். எனினும், மனதை பாதிக்கக்கூடிய வகையிலான செய்தி வரும் வாய்ப்பு உள்ளது.

சிம்மம்: இன்று நீங்கள் பணியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். ஈடுபாட்டுடன் வேலை செய்து பணிகளை நிறைவு செய்வீர்கள். உங்கள் திட்டத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் வேலை செய்யும் பாணியை சிறிது மாற்றிக்கொள்வது, உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும்.

கன்னி: கூட்டாளித்துவ திட்டத்தை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. தனிப்பட்ட முறையில் தொழில் செய்தால், உங்கள் செயல்திறன் மூலம் மற்றவரை விட சிறப்பாக செயல்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எவருடைய உதவியும் இல்லாமல், உங்கள் பணியை மிகச் சிறப்பாக செய்வீர்கள்.

துலாம்: ஒத்த எண்ணங்களை உடையவர்களை இன்று சந்திக்கலாம். அவர்களுடன் பயனுள்ள ஆலோசனைகளை நடத்த வாய்ப்புள்ளது. இதனால் உலகம் குறித்த உங்களது அறிவு விரிவடையும்.

விருச்சிகம்: இன்று நீங்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல், மனப்பூர்வமாக சிந்திப்பீர்கள். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் கவனமாக இருக்கவும். இல்லாவிட்டால் பிறர் உங்களை தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு.

தனுசு: இன்று நீங்கள் நடுநிலையுடன் செயல்படுவீர்கள். வீட்டு பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். வேலைப்பளு சிறிது குறைவாகவே இருக்கும். மாலையில் நீங்கள் இனிமையாக நேரத்தைக் கழிக்கும் வாய்ப்பு உள்ளது.

மகரம்: நெருக்கமானவர்களுடைய மனது புண்படாத வகையில் பேச வேண்டும். உறவுகளில் ஏற்பட்ட விரிசல்களை சரிசெய்யவும், மனக்காயங்களை போக்கவும் இன்று முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

கும்பம்: இன்று உங்களுக்கு காதல் உறவு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்கள், காதல் உணர்வினால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமணமானவர்களும் இன்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். பழைய புகைப்படங்களைப் பார்த்து, மலரும் நினைவுகள் பகிர்ந்துகொள்வீர்கள்.

மீனம்: இன்று மந்தமாக உணர்வீர்கள். ஏதேனும் ஒரு இடத்திற்குச் சென்று நேரத்தை செலவிட விரும்புவீர்கள். கடுமையாக தொடர்ந்து வேலை செய்துவந்ததன் காரணமாக, இந்த ஓய்வு மிகவும் அவசியமான ஒன்றாகும்.