ETV Bharat / spiritual

கும்ப ராசிக்காரர்களுக்கு நாள் முழுவதும் உற்சாகம் பொங்கும் - உங்க ராசிக்கு பலன் என்ன?

செப்டம்பர் 3ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 3, 2026 at 7:16 AM IST

2 Min Read
Choose ETV Bharat

மேஷம்: இன்று, நீங்கள் ஒருவரின் உள்ளத்தை புண்படுத்த நேரிடலாம். வலிமைமிக்க நிலையான உறவை உங்கள் விருப்பப்படி ஏற்படுத்திக் கொள்வீர்கள். கணவன், மனைவிக்கு இடையேயான உறவு வலுவடைய வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்: கடின உழைப்பு இருந்தாலும், உழைப்பிற்கு ஏற்ற வெகுமதி கிடைப்பது கடினம். பிற்பகலில் பயணம் செய்வதை தவிர்க்கவும். மாலையில் நிம்மதியாக மனதிற்கு நெருக்கமானவர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

மிதுனம்: தொழில் ஒப்பந்தங்களில் பரபரப்பாக இருந்தாலும், குடும்பத்தினரிடையே கொண்டாட்டம் காணப்படும். நாளின் பிற்பகுதியில் தொழில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. தனிப்பட்ட சாதனைகளுக்கான கொண்டாட்டங்கள் இருந்தாலும், தொழில் ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும்.

கடகம்: உங்கள் தலைமையில் செய்யப்படும் பணியில் பதட்டங்கள் ஏற்படும். போட்டியாளர்கள் இருப்பினும் வியாபாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். உங்களின் முயற்சியால் மகிழ்ச்சி கிடைக்கப் பெறலாம்.

சிம்மம்: மனம் சொல்வதைக் கேட்காமல், சிந்தித்து செயல்படுவதன் மூலம் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டை புதுப்பித்தல் மற்றும் மாற்றங்கள் செய்ய முயற்சிக்கலாம். இன்று உங்களுக்கு அனைத்து வகையிலும் ஏற்ற நாளாக அமையக்கூடும்.

கன்னி: நீங்கள் மற்றவர்களின் மனதை புண்படுத்துபவராக அடையாளம் காட்டக்கூடிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். வரவை விட செலவு அதிகரிக்கக்கூடும். நீண்டகால திருமணத்தடை நீங்கும். உங்கள் முயற்சியால் உறவுகள் வலுப்படக் கூடும்.

துலாம்: உங்கள் நடை உடைகள் தோற்றத்தையும் அழகையும் மெருகேற்றும். பிறர் உங்களது அழகு அல்லது தோற்றத்தால் கவரப்படுவார்கள். இன்று மாலை நடைபெறும் பொது நிகழ்ச்சிகள், சிலருடன் உங்களை நெருக்கமானதாக்கும். காதல் வயப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

விருச்சிகம்: அவசரகதி முடிவுகள் பலன் தராது. உங்கள் திட்டங்களை முடிவு செய்வதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். முயற்சிக்கு ஏற்ப பலன் கிடைக்காமல் போகலாம். தொழில்ரீதியாக இன்று பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. மாலைப்பொழுதை பிடித்தமானவருக்கு சிறப்பானதாக ஆக்குங்கள்.

தனுசு: இன்று அமைதியாக காணப்படுவீர்கள். சுய பரிசோதனை செய்யும் மனநிலையில் இருப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் மன உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். இன்று பிற்பகலில், வியாபார ரீதியாக சிலரை சந்திக்கலாம் அல்லது பொழுதுபோக்குக்காக நேரம் ஒதுக்கலாம். இதனால் மாலையில் பணம் செலவு செய்வீர்கள்.

மகரம்: நீங்கள் இலக்கை எட்டுவதற்கு கடினமாக உழைப்பீர்கள். பொழுதுபோக்கிற்காக சிறிது நேரம் ஒதுக்குவீர்கள். உங்கள் மேலதிகாரி மற்றும் உடன் பணியாற்றுபவர்கள் உங்களை புகழ்ந்து தள்ளுவார்கள். அந்த முகஸ்துதிகளை பொருப்படுத்தாதீர்கள். அவற்றின் உட்பொருள் உங்களுக்கு புரியாமல் போகலாம்.

கும்பம்: இன்று கொண்டாட்டத்துக்கான நல்ல செய்தி வந்து சேரும். இன்றைய நாள் உற்சாகத்துடன் தொடங்கி, நாள் முழுவதும் நீடிக்கும். புதிய நபர்களை சந்தித்து நட்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மாலையில் பிரியமானவருடன் நேரத்தை செலவழிப்பதன் மூலம் நாளின் முடிவு மிகச்சிறந்ததாக இருக்கும்.

மீனம்: நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், திருமண பந்தத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்ற நாள் இன்று. திருமணம் ஆனவராக அல்லது காதலர்களாக இருந்தால் இன்றைய நாள் காதல் கூடும். வியாபாரத்தில் புதிய பங்குதாதாரர் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் இன்று உருவாகலாம். புதிய உறவை அல்லது நட்பை ஏற்படுத்தவும் பழைய உறவுகளை புதுப்பிக்கவும் இன்று ஏற்ற நாள்.