ETV Bharat / spiritual

மிதுன ராசிக்கார்களுக்கு இன்று கனவுகள் நிறைவேறும் நாள் - உங்கள் ராசிக்கு எப்படி?

ஆகஸ்ட் 31ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 31, 2026 at 7:13 AM IST

1 Min Read
Choose ETV Bharat

மேஷம்: நீங்கள் தனியாக இருந்தாலும் தனிமையாக உணரக்கூடாது. இன்று உங்கள் உள்ளுணர்வைக் கேட்டு நடக்க விரும்புவீர்கள். உங்கள் மௌனத்தை புரிந்து கொள்ளக்கூடிய அன்பானவர்களோடு மாலை நேரத்தை செலவிடுங்கள்.

ரிஷபம்: உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். புத்திசாலித்தனமான மனோபாவத்தை வளர்த்துக்கொள்ளவும். பெருந்தன்மையுடனும், திறந்த மனதுடனும் இருக்க முயற்சிக்கவும். அது உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கும்.

மிதுனம்: இன்று வேலை மற்றும் குடும்பத்திற்குமிடையே சமமாக நேரத்தை ஒதுக்கி சிறப்பாக செயல்படுவீர்கள். வேலைப்பளு அதிகம் இருந்தாலும், குடும்பத்திற்காக சிறு பயண ஏற்பாட்டை செய்வீர்கள். இந்த நாள் உங்கள் கனவுகள் நிறைவேறும் நன்னாளாக அமையும்.

கடகம்: உங்கள் முன்னேற்றத்திற்கான தனிப்பாதையை உருவாக்குவீர்கள். பிறரிடருந்து மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கும். வியாபார போட்டியாளர்களாலும், நோய்களாலும் பாதிப்பு ஏற்படும். எதிரிகளின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள்.

சிம்மம்: நாம் யார் என்பதை உருவாக்கும் காரணியாக நமது நண்பர்கள் இருக்கிறார்கள். கடந்த காலங்களில், உங்கள் இயல்பான உள்ளுணர்வால் நீங்கள் கட்டமைத்த சமூக வட்டத்தில் அர்ப்பணிப்புள்ள நண்பர்களே இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதை உணர்வீர்கள்.

கன்னி: இன்று உங்கள் மனதில் யோசனைகள் பொங்கி வழியும். கடமைகளுடன் தற்போதைய வேலையை ஒப்பிட்டு குழம்புவீர்கள். புதிய தொடர்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தினரும், நண்பர்களும் உங்களுடம் மேலும் நெருக்கமாவார்கள்.

துலாம்: எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளைப் பெற கடந்த கால அனுபவங்களே முதலீடு. சுற்றியிருக்கும் விஷயங்களில் பிடிப்பு வேண்டாம். அது உங்கள் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் சூழ்நிலைக்கு தள்ளிவிடும். உங்களுடைய புரிதலுக்கும், அணுகுமுறைக்கும், இன்று பாராட்டும் மதிப்பும் கிடைக்கும்.

விருச்சிகம்: உங்கள் உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்தி உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் பருமனை தவிர்க்கவும். உங்களின் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கைமுறையால் உடல்நலக் குறைவுகள் ஏற்படும். ஆரோக்கியமாக சாப்பிட்டு சந்தோஷமாக வாழவும்.

தனுசு: இன்று உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்வீர்கள். வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களை கண்டறிய முயற்சிப்பீர்கள். நீங்கள் விரும்பியதைச் சாதிக்கவும், அதற்கு நியாயமான தீர்வையும் கண்டுபிடிக்க முயற்சிக்கவும்.

மகரம்: இன்று உங்களுக்கு வேலைப்பளு அதிகம் இருந்தாலும், அவை உங்களை பாதிக்காதவாறு நடந்து கொள்வீர்கள். உங்களுக்கான இலக்கை அமைத்து செயல்படுவதன் மூலம் வெற்றி அடையலாம்.

கும்பம்: நீங்கள் அதிக வேகத்துடன் இலக்குகளை அடைய முற்பட்டாலும், அது நிறைவேறாமல் போக வாய்ப்பு உள்ளது. நாளைய பொழுதில் மாற்றம் இருப்பதால் நம்பிக்கையை இழக்க வேண்டாம். சிறிது நேரம் ஓய்வு எடுத்து புத்துணர்ச்சி பெற்றுகொள்ளுங்கள்.

மீனம்: இன்று ஒரு முக்கியமான நாள். வீட்டிலேயோ அல்லது பணியிடத்திலேயோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சாதனையை நீங்கள் செய்து முடிக்கலாம். உங்கள் தொழில்முறை மற்றும் சமூக அந்தஸ்தில் ஒரு படி முன்னேறுவீர்கள்.