வேலூர்: நாட்டின் 78வது சுதந்திர தின விழாவையொட்டி, பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி மற்றும் மாநில துணைத்தலைவர் நரேந்திரன் உள்ளிட்டோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர், வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து ராஜா திரையரங்க நிறுத்தம் வழியாக வேலூர் கோட்டை வரை இருசக்கர வாகனத்தில் 78 அடி நீள தேசியக் கொடியை ஏந்தியவாறு இருசக்கர வாகனப் பேரணி சென்றனர்.
அந்த கொடியுடன் அவர்கள் வேலூர் கோட்டைக்குள் நுழைய முயன்ற போது, காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கோட்டைக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். இதனைத் தொடர்ந்து பாஜவினருக்கும், காவல் துறையினருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாஜகவினர் கோட்டையின் சிப்பாய் புரட்சி நினைவுத்தூணுக்கு தேசிய கொடியை ஏந்திச் சென்று நினைவுத் தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின், வேலூர் கோட்டையைச் சுற்றி தேசியக் கொடியை பிடித்தவாறு நின்று கோஷங்களை எழுப்பினர்.