ETV Bharat / lifestyle

வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? செக் செய்வது எப்படி?

தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்பது? முழு விவரம் இதோ உங்களுக்காக.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Google)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : February 23, 2026 at 4:22 PM IST

2 Min Read
Choose ETV Bharat

தமிழ்நாட்டில் விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு தீவிரத் திருத்தத்தைத் தொடர்ந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாடு முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டார்.

இந்த இறுதி வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 2,77,038,925 ஆண்கள், 2,89,060,838 பெண்கள், 7,617 மூன்றாம் பாலினத்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இதில் உங்கள் பெயர் உள்ளதா? இல்லையா என்பதை தெரிந்து கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

இறுதி வாக்காளர் பட்டியல்!
இறுதி வாக்காளர் பட்டியல்! (ETV Bharat)

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள https://electoralsearch.eci.gov.in/ இந்த லிங்கை க்ளிக் செய்யவும். இந்த லிங்க் ஓபன் ஆனதும், மூன்று ஆப்சன்களை (SEARCH BY EPIC, SEARCH BY DETAILS, SERACH BY MOBILE) காட்டும். அதில் உங்களிடம் உள்ள தகவலுக்கு ஏற்ப ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

1. SEARCH BY EPIC என்பதை க்ளிக் செய்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தளம் ஓபன் ஆகும். அதில், உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண் மற்றும் மாநிலத்தை பதிவிட்டு, பின்னர் சரியாக கேப்சாவை பதிவிட்டு search ஆப்சனை க்ளிக் செய்யவும்.

அடையாள அட்டை எண் மூலம் தேடுதல்
அடையாள அட்டை எண் மூலம் தேடுதல் (eci.gov website)

2. புதிய வாக்காளர் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் தெரியாதவராக இருந்தால் SEARCH BY DETAILS ஆப்ஷனை க்ளிக் செய்யவும். அதில், தேர்தல் ஆணையம் கேட்டுள்ள தகவல்கள் அணைத்தையும் சரியாக பதிவிடவும். பின்னர் கேப்சாவை சரியாக பதிவிட்டு search ஆப்சனை க்ளிக் செய்யவும்.

தகவல்கள் மூலம் தேடுதல்
தகவல்கள் மூலம் தேடுதல் (eci.gov website)

3. வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் அனைத்து தகவல்களும் சரியாக தெரியாது என்பவர்கள் மூன்றாவது ஆப்ஷனான SERACH BY MOBILE என்பதை க்ளிக் செய்யவும்.

தொலைப்பேசி எண் மூலம் தேடுதல்
தொலைபேசி எண் மூலம் தேடுதல் (eci.gov website)

இதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை பதிவிட்டு, உங்கள் மொபைலுக்கு வரும் OTP ஐ எண்ணை உள்ளிட்டு, கேப்சாவை சரியாக டைப் செய்து search ஆப்சனை க்ளிக் செய்யவும்.

உங்களுக்கான வாக்குச்சாவடி விவரம்
உங்களுக்கான வாக்குச்சாவடி விவரம் (eci.gov website)

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் கீழே தகவல்கள் கிடைக்கும். இதில் உங்களது வாக்குச்சாவடி எது? என்பது முதல் அனைத்து தகவல்களும் இருக்கும்.

இதையும் படிங்க:

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

பெண் வாக்காளர்களே அதிகம்... இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஈரோடு ஆட்சியர்