எண்ணெய் குடிக்காத புசு புசு வாழைக்காய் பஜ்ஜி - டீக்கடை ஸ்டைலில் இப்படி செய்ங்க!
டீக்கடை ஸ்டைலில் புசுபுசுவென, எண்ணெய் குடிக்காத வாழைக்காய் பஜ்ஜி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

Published : October 22, 2025 at 4:20 PM IST
மழைக்காலம் வந்தாலே, மாலைப் பொழுதில் சுடச்சுட ஒரு கப் டீயுடன் சூடான மற்றும் காரசாரமான ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என பலருக்கும் தோன்றும். உங்களுக்கும் அப்படித்தானா? அப்படியானால், இந்த மழையில் உங்கள் மாலைப்பொழுதை மேலும் இனிமையாக்க, டீக்கடைகளில் கிடைப்பது போல புசுபுசுவென உப்பிய, எண்ணெய் குடிக்காத வாழைக்காய் பஜ்ஜியை செய்து பாருங்க. வீட்டில் உள்ளவர்கள் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
வாழைக்காய் பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள்:
- வாழைக்காய் - 1
- கடலை மாவு - 2 கப்
- அரிசி மாவு - 1/2 கப்
- மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
- பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
- உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
வாழைக்காய் பஜ்ஜி செய்முறை:
- முதலில் வாழைக்காயை நன்கு கழுவி, அதன் மேல் மற்றும் கீழ் பகுதியை வெட்டிவிடவும்.
- அடுத்ததாக, பீலர் பயன்படுத்தி வாழைக்காயின் தோலை நீக்கி, நீட்டமாக சீவிக் கொள்ளவும்.
- இப்போது சீவி வைத்த வாழைக்காயை பெரிய தட்டில் நன்கு பரப்பி வைக்கவும்.
- அடுத்ததாக, பஜ்ஜி மாவு செய்வதற்கு, ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- இப்போது, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கை பயன்படுத்தி கட்டி இல்லாமல் மாவை கலந்து விடவும்.
- இதற்கிடையில், அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சீவி வைத்த வாழைக்காயை கலந்து வைத்த மாவில் இரண்டு முதல் மூன்று முறை நன்கு முக்கி எண்ணெயில் போடவும்.
- ஒரு புறம் வெந்ததும், மறு புறம் திரும்பி போட்டு பொரித்து எடுத்தால் எண்ணெய் குடிக்காத சூப்பரான பஜ்ஜி தயார்.
டிப்ஸ்:
|
சரி, பஜ்ஜி ரெடி! அது கூடவே பஜ்ஜிக்கு ஏற்ற காரசாரமான சட்னி எப்படி செய்வது என்பதையும் பார்க்கலாம் வாங்க.
ஒரு மிக்ஸி ஜாரில், 4 சின்ன வெங்காயம், 1 சின்ன தக்காளி, சின்ன துண்டு இஞ்சி, சின்ன நெல்லிக்காய் அளவு புளி, 6 பச்சை மிளகாய், கொஞ்சமாக மல்லி இலை, 3 டீஸ்பூன் தேங்காய், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
இப்போது கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். பின்னர், தாளிப்பு கரண்டியில் எண்ணெய், கடுகு , கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்தால் பஜ்ஜிக்கு ஏற்ற சட்னி ரெடி! அப்புறம் என்ன யோசனை, மழைக்காலத்திற்கு சாய்ங்காலம் சுட சுட டீயுடன், இந்த பஜ்ஜி மற்றும் சட்னி செய்து கொண்டாடுங்கள்.

