ETV Bharat / lifestyle

குழந்தைக்கு முடி சரியா வளரலையேனு கவலையா? விளக்கெண்ணெய் - தேங்காய் எண்ணெய்: எது பெஸ்ட்?

விளக்கெண்ணெய் என்பது உச்சந்தலையின் மேல் பகுதியில் ஈரப்பதத்தை தக்கவைத்து, வேர்களை பாதுகாப்பதில் சிறந்தது. தேங்காய் எண்ணெய் முடியின் உள்ளே சென்று வலிமை தருவதில் வல்லது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : July 5, 2026 at 1:10 PM IST

3 Min Read
Choose ETV Bharat

குழந்தை பிறந்த பின் பெற்றோர்களுக்கு இருக்கும் பல கவலைகளில், குழந்தைக்கு எப்படி முடி வளரும் என்ற கவலையும் அடங்கும். ஒரு வேளை குழந்தைக்கு முடி அடர்த்தியாக வளரவில்லை என்றால், ஏன் மெதுவாக வளர்கிறது, ஒருவேளை சத்து பத்தவில்லையோ என்ற கவலை எல்லா அம்மாக்களுக்கும் வருவது இயற்கைதான்.

"என் குழந்தைக்கு முடி நல்லா வளர என்ன எண்ணெய் தேய்க்கலாம்?" என்று வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் கேட்டால், ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்வார்கள். சிலர் பாரம்பரியமாக பயன்படுத்தும் விளக்கெண்ணெய் நல்லது என்பார்கள், இன்னும் சிலரோ காலம் காலமாக நம்மை காக்கும் தேங்காய் எண்ணெயே போதும் என்பார்கள்.

உண்மையில், இந்த இரண்டு எண்ணெய்களுமே குழந்தைகளின் கூந்தல் வளர்ச்சிக்கு தனித்துவமான பல நன்மைகளை தரக்கூடியவைதான். ஆனால், குழந்தையின் தேவைக்கு இதில் எது சரியாக இருக்கும்? இரண்டில் இருக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விளக்கெண்ணெய் தரும் நன்மைகள்

விளக்கெண்ணெய் சற்று அடர்த்தியாகவும், பிசுபிசுப்பு தன்மை கொண்டதாகவும் இருந்தாலும், முடியின் வேர்ப்பகுதியை ஊட்டி வளர்ப்பதில் இதற்கு நிகர் ஏதுமில்லை. இதில் 'ரிசினோலிக் அமிலம்' (Ricinoleic acid) என்ற சத்து நிறைந்துள்ளது.

  • வேர்களுக்கு கிடைக்கும் புதிய பலம்: இந்த எண்ணெயை கொண்டு உச்சந்தலையில் மென்மையாக மசாஜ் செய்யும்போது, அங்கு ரத்த ஓட்டம் சீராகிறது. இது தூங்கி கொண்டிருக்கும் முடியின் வேர்களை தூண்டி, புதிய முடிகள் ஆரோக்கியமாக வளர உதவுகிறது.
  • கிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்பு: குழந்தைகளின் உச்சந்தலையில் வறட்சியினாலோ அல்லது பொடுகினாலோ அரிப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு திறன் (Anti-fungal) ஒரு அரணாக செயல்படுகிறது.
  • இயற்கை ஈரப்பதமூட்டி: முடியின் வேர்களுக்கு தேவையான ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைத்து, முடி உடைவதையும் வறண்டு போவதையும் தடுக்கிறது என்று மருத்துவ ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன.

தேங்காய் எண்ணெய் தரும் நன்மைகள்

தலைமுறை தலைமுறையாக நாம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய், முடியின் ஆரோக்கியத்திற்கு மிக எளிமையான மற்றும் சிறந்த தீர்வாகும். இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மிக எளிதாக முடியின் உட்பகுதி வரை ஊடுருவக்கூடியவை.

  • உள்ளிருந்து தரும் ஊட்டச்சத்து: தேங்காய் எண்ணெய் முடியின் மேல் பகுதியில் மட்டும் வேலை செய்யாமல், முடியின் இழைக்குள்ளே சென்று அதற்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்து, முடியை உள்ளிருந்து பலப்படுத்துகிறது.
  • மிருதுவான கூந்தல்: சில குழந்தைகளுக்கு தலைமுடி மிகவும் வறண்டு, சிக்குப்பிடித்து, ஒருவித செம்பட்டை நிறத்தில் இருக்கும். அப்படிப்பட்ட முடிக்கு தேங்காய் எண்ணெய் தடவி வரும்போது, முடி நல்ல மென்மையையும், இயற்கையான கருகரு பளபளப்பையும் பெறும்.
  • ஈரப்பதம் குறையாமல் தடுக்கும்: தலைமுடி குளிக்கும்போது தன் இயற்கையான ஈரப்பதத்தை இழந்துவிடாமல் இருக்க, இந்த எண்ணெய் ஒரு பாதுகாப்புப் படலமாக செயல்படுகிறது என்று தோல் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இரண்டில் எது குழந்தைக்கு சிறந்தது?

இப்போது இருக்கும் முக்கிய கேள்வி, "அப்படியென்றால் என் குழந்தைக்கு நான் எதைத் தேய்ப்பது?" என்பதுதான். இங்குதான் ஒரு சூட்சுமம் இருக்கிறது. விளக்கெண்ணெய் என்பது உச்சந்தலையின் மேல் பகுதியில் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, வேர்களை பாதுகாப்பதில் வல்லது. தேங்காய் எண்ணெய் முடியின் உள்ளே சென்று வலிமை தருவதில் வல்லது. அதாவது, ஒன்று வேருக்கு பலம் தருகிறது, இன்னொன்று முடிக்கு மெருகூட்டுகிறது.

எனவே, இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, இரண்டையும் கலந்து பயன்படுத்துவதே உங்கள் குழந்தையின் கூந்தல் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த பலனைத் தரும்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

விளக்கெண்ணெய் மிகவும் அடர்த்தியாக இருக்கும் என்பதால், அதை அப்படியே நேரடியாக குழந்தைகளின் தலையில் தடவக் கூடாது. அது அவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தலாம்.

  • ஒரு சிறிய கிண்ணத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணெயை எடுத்து கொண்டு, அதில் பாதியளவு அல்லது சில துளிகள் விளக்கெண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • இந்த எண்ணெய் கலவையை லேசாக (கை பொறுக்கும் சூட்டிற்கு) வெதுவெதுப்பாக்கிக் கொள்ளவும்.
  • குழந்தையின் உச்சந்தலையிலும், முடியின் நுனி வரையிலும் மென்மையாக, விரல் நுனிகளால் மசாஜ் செய்து தேய்த்து விடுங்கள்.
  • ஒரு 30 நிமிடங்கள் அப்படியே ஊறவிட்டு, அதன் பிறகு குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மென்மையான ஷாம்பு அல்லது சீயக்காய் தூள் கொண்டு தலையைக் குளிப்பாட்டி விடுங்கள். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இப்படிச் செய்து வந்தாலே, குழந்தையின் தலையில் வறட்சி நீங்கி, கூந்தல் ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரத் தொடங்குவதை நீங்களே பார்க்கலாம்.

இதையும் படிங்க:

நூல் இழைகளில் நுட்பம்: இந்திய காலநிலையை வெல்லும் புடவை மரபு!

பதின்ம வயதினரை சூழும் 'காஸ்மெடிகோரெக்ஸியா': ஆபத்தாகும் அழகுப் பொருட்கள் மோகம்!

பெண்களின் இதய நோய் அபாயத்தை 20% குறைக்கும் ஸ்ட்ரென்த் ட்ரெய்னிங்: ஆய்வில் சூப்பர் தகவல்!