ETV Bharat / lifestyle

சரும பளபளப்பை கெடுக்கும் உணவுகள் - மருத்துவர் கொடுத்த வார்னிங்!

சரும ஆரோக்கியத்திற்கு பால் கலந்த சாக்லேட்டுகளை தவிர்த்துவிட்டு, குறைந்தபட்சம் 70% கோகோ உள்ள டார்க் சாக்லேட்டுகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : January 9, 2026 at 5:05 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சருமம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் எவ்வளவு செலவு செய்கிறோம்? விலையுயர்ந்த ஃபேஸ் வாஷ், சீரம், விதவிதமான கிரீம்கள் என ஒரு பெரிய பட்டியலே நம்மிடம் இருக்கும். ஆனால், முகத்தில் பருக்களோ, சுருக்கங்களோ அல்லது பொலிவற்ற தன்மையோ குறையவில்லை என்றால், நாம் கவனிக்க வேண்டிய இடம் நமது முகம் அல்ல, நமது தட்டு என்கிறார் அமெரிக்காவின் பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் அந்தோணி யூன்.

என்னவென்று புரியவில்லையா? "உள்ளே செல்வதுதான் வெளியே தெரியும்" என்பது சருமத்திற்கும் பொருந்தும் எனக்கூறும் மருத்துவர், நாம் உண்ணும் சில உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து, உடலில் வீக்கத்தை (Inflammation) உண்டாக்கி, சருமத்தின் இளமையை குறைக்கின்றன என்றார். இப்படியிருக்க, சரும ஆரோக்கியத்தைக் கெடுக்கும் 5 முக்கிய உணவுகள் என மருத்துவர் சொல்வது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)

வெள்ளை பிரெட்: காலை உணவிற்கு எளிதாக இருக்கிறது என்று நாம் சாப்பிடும் பிரெட் சருமத்திற்குப் பெரிய எதிரி என எச்சரிக்கிறார். இதில் அதிகப்படியான 'கிளைசெமிக் இண்டெக்ஸ்' (High Glycemic Index) உள்ளது. இதை சாப்பிட்ட உடனே ரத்தத்தில் சர்க்கரை அளவு எகிறும். இதனால் இன்சுலின் சுரப்பு அதிகரித்து, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை தூண்டுகிறது. இது பருக்கள், முகத்தில் சிவப்புத் திட்டுகள் மற்றும் சீக்கிரம் வயதான தோற்றம் ஏற்படக் காரணமாகிறது.

காரமான தின்பண்டங்கள்: நேரம் போகவில்லை என்றாலோ அல்லது பசிக்கிறது என்றாலோ நாம் உடனே எடுப்பது சிப்ஸ் அல்லது காரமான பாக்கெட் உணவுகள் தான். இவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் மற்றும் 'பேட் ஃபேட்ஸ்' எனப்படும் உடலுக்கு கெடுதல் தரும் கொழுப்புகள் உடலில் வீக்கத்தை உண்டாக்குகின்றன. இந்த வீக்கம் முகத்தில் வீக்கம் , பருக்கள் மற்றும் எரிச்சலாக வெளிப்படும்.

மில்க் சாக்லேட்: சாக்லேட் என்றாலே இனிப்புதான். ஆனால், டார்க் சாக்லேட் ஆரோக்கியமானது. மாறாக, மில்க் சாக்லேட்டுகளில் சர்க்கரையும் பாலும் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. இந்த இரண்டுமே சருமத்திற்கு பகைதான். நீங்கள் சாக்லேட் பிரியராக இருந்தால், பால் கலந்த சாக்லேட்டுகளை தவிர்த்துவிட்டு, குறைந்தபட்சம் 70% கோகோ உள்ள டார்க் சாக்லேட்டுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

கொழுப்பு நீக்கப்பட்ட பால் (Skim Milk): கொழுப்பை (ஆடை) குறைக்கிறோம் என்ற பெயரில் பலர் 'ஸ்கிம் மில்க்' குடிக்கிறார்கள். ஆனால், ஆய்வுகளின்படி ஆடை நீக்கப்பட்ட பால் குடிப்பதற்கும், முகப்பருக்கள் வருவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக டாக்டர் யூன் கூறுகிறார். சரும ஆரோக்கியத்தை பொறுத்தவரை இது சரியான தேர்வு அல்ல.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)

காலை உணவுக்கு Cereals: இன்றைய பிஸியான வாழ்க்கை முறைக்கு காலை உணவிற்கு 'சீரியல்ஸ்' ஒரு வரப்பிரசாதமாக தெரியலாம். ஆனால், சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான தானிய வகைகளில் சர்க்கரை அளவு மிக அதிகம். குறிப்பாக, சர்க்கரை நிறைந்த இந்த தானியங்களை ஸ்கிம் மில்க் உடன் சேர்த்து சாப்பிடுவது சருமத்திற்கு செய்யும் மிகப்பெரிய தவறு. இது குடல் ஆரோக்கியத்தையும் கெடுத்து, அதன் விளைவாக சருமத்தை பொலிவிழக்க செய்யும்.

அழகான சருமத்திற்கான எளிய வழி: மேலே சொன்ன உணவுகளை தவிர்ப்பதுடன், அதிகப்படியான காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களை உணவில் சேர்த்து கொள்வது அவசியம். அழகாகத் தெரிய வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. ஆனால், அந்த அழகு ஆரோக்கியமான முறையில் கிடைக்க வேண்டும். டாக்டர் அந்தோணி யூன் கூறுவது போல, தவறான உணவுப் பழக்கம் உங்கள் முயற்சியைத் தவிடுபொடியாக்கிவிடும். என என்ன உட்கொள்கிறோம் என்பதை அதிக கவனம் வேண்டும்.

இதையும் படிங்க:

கைகளில் உள்ள கொழுப்பை குறைக்கும் யோகாசனங்கள் - எப்படி பண்ணனும்னு தெரிஞ்சுக்கோங்க!

முடி கொட்டுவது நிக்கணுமா? அப்போ இந்த 5 உணவுகளை மிஸ் பண்ணிடாதீங்க!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.