ETV Bharat / international

அதிபர் டிர்ம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு; 31 வயது இளைஞர் கைது - நடந்தது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் டிர்ம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சுடு நடத்திய நபர்
அதிபர் டிர்ம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சுடு நடத்திய நபர் (Truth Social/@realDonaldTrump)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 26, 2026 at 11:04 AM IST

2 Min Read
Choose ETV Bharat

வாஷிங்டன்: வெள்ளை மாளிகை பத்திரிக்கையாளர்களுடனான நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை ரகசிய சேவை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நேற்று இரவு வெள்ளை மாளிகை பத்திரிக்கையாளர்களுடனான உணவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரின் மனைவி மெலானியா டிரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பல முக்கிய தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி தொடங்கி சில நிமிடங்களில் வெளியில் பயங்கர துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் அலறி மேசைகளுக்குக் கீழே தஞ்சம் புகுந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ரகசிய சேவை அதிகாரிகள் உடனடியாக மேடையில் பேசிக்கொண்டிருந்த அதிபர் டிர்ம்பை மீட்டு, பாதுகாப்பாக அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். மேலும், அனைத்து முக்கிய தலைவர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் அங்கிருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்றது எப்படி?

ஹோட்டலில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்ல ரகசிய சேவை அதிகாரிகள் பாதுகாப்பைக் கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில், இரவு நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களில் துப்பாக்கியுடன் அங்கு வந்து நபர், திடீரென துப்பாக்கிச் சூட்டை நடத்தினார். சுமார் 8 முறை வரை சுடப்பட்ட நிலையில், ஒரு அதிகாரியின் மீது குண்டு பாய்ந்தது. அந்த நபரை மடக்கிப் பிடித்த அதிகாரிகள், அவரிடமிருந்த துப்பாக்கியைப் பிடுங்கி அவரை கைது செய்தனர். காயமடைந்த அதிகாரி குண்டு துளைக்காத பாதுகாப்பு உடை அணிந்திருந்த நிலையில், நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தற்போது அவர் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், 31 வயதான கோல் தாமஸ் ஆலன் என்பதும், இவர் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இவரை ரகசிய சேவை அதிகாரிகள் கைது செய்த நிலையில், அவரிடமிருந்து பல்வேறு ரக துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை பறிமுதல் செய்துள்ளனர்.

அதிபர் செய்தியாளர்கள் சந்திப்பு

இச்சம்பவத்திற்கு பிறகு உடனடியாக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய டிர்ம்ப், அமெரிக்காவின் ரகசிய சேவை அதிகாரிகளின் உடனடி மற்றும் துணிச்சலான செயலை பாராட்டினார். மேலும், அவரின் சமூக வலைத்தளப்பக்கத்தில் (Truth Social), சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னரும் நிகழ்ச்சியைத் தொடர விரும்பியதாகவும், அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரிலேயே அங்கிருந்து வெளியேறியதாகவும் தெரிவித்தார். நிறுத்தப்பட்ட நிகழ்ச்சி மீண்டும் 30 நாட்களுக்கு நடத்தப்படும் எனவும் உறுதியளித்தார். தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை ‘தனித்துச் செயல்படும் நடிகர்’, ’மிகவும் நோய்வாய்ப்பட்ட நபர்’ என அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க : காசா போருக்கு பிறகு முதல் தேர்தல்: ஆர்வமுடன் வாக்களிக்க காத்திருக்கும் பாலஸ்தீனியர்கள்

அதிபர் டிர்ம்ப் மீது இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்வது, அமெரிக்காவின் பாதுகாப்பைக் குறித்த கேள்வி எழுப்புவதாக விமர்சனம் செய்யப்படுகிறது. அதேநேரம், கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மோடி கண்டனம்

இந்த சம்பவம் சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‘அதிபர் டிரம்ப் உட்பட அனைத்து தலைவர்களும் பாதுகாப்பாக இருப்பது ஆறுதலாக உள்ளது என்றும், ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை, அதனை வன்மையாக கண்டிப்பாதாகவும்’ தெரிவித்துள்ளார்.