ETV Bharat / international

நேபாள பெருவெள்ளம்: சேற்று சுனாமியில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; 285 இந்தியர்கள் உட்பட 1,400 பேர் மாயம்

வெளியுறவு அமைச்சகம் சிறப்பு கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது. +91 11 2308 8718, +91 11 2308 8719 ஆகிய எண்கள் வாயிலாக அதனை பொதுமக்களால் தொடர்பு கொள்ள முடியும்.

வெள்ளத்தால் அனைத்தையும் இழந்த பொதுமக்கள்
வெள்ளத்தால் அனைத்தையும் இழந்த பொதுமக்கள் (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 27, 2026 at 8:38 PM IST

3 Min Read
Choose ETV Bharat

புது டெல்லி: நேபாள பெருவெள்ளத்தால் ஏற்பட்ட சேற்று சுனாமியில் சிக்கி இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 285 இந்தியர்கள் உட்பட 1,400 பேர் மாயமகி உள்ளனர் என்றும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் நேற்று (ஆகஸ்ட் 26) திடீரென வெள்ளப்பெருக்கு மற்றும் சேற்று சுனாமி (நிலச்சரிவு) ஏற்பட்டது. இதில் குறைந்தபட்சம் 335 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 1,400க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெள்ளம் மற்றும் சேற்று சுனாமியால் முழுமையாக சேதமடைந்த குடியிருப்பு பகுதி
வெள்ளம் மற்றும் சேற்று சுனாமியால் முழுமையாக சேதமடைந்த குடியிருப்பு பகுதி (AP)

இந்த விபத்துக்கு பனிப்பாறை சரிவு மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட மண் சரிவே காரணம் என்று நேபாள வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் சேற்று பெருக்கால் நேபாளத்தின் திரிசூலி மற்றும் போட்டேகோஷி நதிப் படுகைகளில் உள்ள ராசுவா, நுவாகோட் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

826 பேர் மாயம்

குறிப்பாக, அதி தீவிர வெள்ளப்பெருக்கு மற்றும் சேற்று சுனாமியால் குடியிருப்புகள், சாலைகள், பாலங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பேரழிவு காரணமாக இப்போது வரை 332 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன், இந்தியர்களுடன் சேர்த்து 826 பேர் மாயமாகி இருப்பதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதேபோல் சீன ஊடகமான சிசிடிவி, திபெத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 558 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளம் சென்ற 288 இந்தியர்கள் உள்ளிட்ட பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று பிற்பகல் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிப்பு

தொடர்ந்து பேசிய அவர், "காணாமல் போனவர்களில் திரிசூலி 1 பவர் திட்டத்தில் பணியாற்றியவர்களும் அடங்குவர். நம்முடைய தூதரகம் தொடர்ந்து காத்மண்டு உடன் இணைப்பில் இருந்து காணாமல் போனவர்கள் குறித்து கேட்டறிந்து வருகிறது. நேபாளத்தில் தகவல் தொடர்பு இணைப்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. இதனாலும், களத்தில் உள்ளவர்களை தொடர்புகொள்வதில் சிக்கல் உள்ளது.

வெள்ளம் மற்றும் சேற்று சுனாமியின் கோர முகத்தை காட்டும் பாதிப்பு
வெள்ளம் மற்றும் சேற்று சுனாமியின் கோர முகத்தை காட்டும் பாதிப்பு (AP)

அந்த வகையில், தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்ற 37 பேர் மற்றும் 49 பேர் அடங்கிய இரண்டு குழுக்களையும், மேற்கு வங்கத்தில் இருந்து புறப்பட்ட 32 பேர் கொண்ட குழுவையும், கேரளாவில் இருந்து சென்ற 33 பேரையும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்ற 61 இந்தியர்களையும் தொடர்புகொள்ள முடியவில்லை" என்றார்.

தமிழ்நாட்டை சேர்ந்த 21 பேர் மீட்பு

இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் நேபாளத்தில் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாக இன்று மாலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவின் வாயிலாக அவர் உறுதிப்படுத்தினார். தொடர்ந்து, மீட்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களையும் அந்த பதிவில் அவர் தெரியப்படுத்தி உள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்
பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரம் (AP)

இத்துடன், ஓர் சிறப்பு கட்டுப்பாட்டு மையத்தையும் வெளியுறவு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. +91 11 2308 8718, +91 11 2308 8719 ஆகிய எண்கள் வாயிலாக அதனை பொதுமக்கள் தொடர்பு கொள்ள முடியும். இதேபோல், +91 99682 91988 என்ற வாட்ஸ்-அப் மற்றும் குறுஞ்செய்திக்கான எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேற்று சுனாமி

இந்த பேரழிவை கண் முன்னே பார்த்த நுவாகோட் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர்வாசி ஒருவர், "அந்த பகுதியை தாக்கியது நீருடன் கலந்த ஓர் மண் சுனாமி போல இருந்தது. எங்கள் கண் எதிரிலேயே மக்கள் காணாமல் போவதை பார்க்க முடிந்தது" என அதிர்ச்சியுடன் விவரித்தார்.

பெருவெள்ளத்தால் உருக்குலைந்துக் காணப்படும் கட்டிடம்
பெருவெள்ளத்தால் உருக்குலைந்துக் காணப்படும் கட்டிடம் (AP Photo/Niranjan Shrestha)

செங்குத்தான இமயமலையில் இருந்து சரிந்த பனியால் இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அது, பாறைகளையும், பெரும் திரளமான சேற்றையும் புரட்டி வந்து தன்னுடைய பாதையில் இருந்த அனைத்தையும் தரைமட்டாக்கிவிட்டது. இதில், உயரமான கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. குறிப்பாக, இந்த பேரழிவு தப்பி ஓட கூட மக்களுக்கு நேரம் வழங்கவில்லை. இதன் விளைவாகவே இத்தனை உயிர்கள் பலியாகி உள்ளன.

இதையும் படிங்க: நேபாளத்தில் சிக்கிய 148 தமிழர்களின் நிலை என்ன? ஆன்மீக சொற்பொழிவாளர் வெளியிட்ட வீடியோ

அவசரத் தொடர்புகள்

காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அவசரத் தொடர்பு எண்களாக +977 985 131 6807, +977 970 910 7500, மற்றும் +977 981 032 6117 ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்-அப் வாயிலாகவும் தொடர்பு கொள்ள முடியும்.

பின்வரும் உதவி எண்களிலும் நேபாள அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்

  • சுற்றுலா காவல்துறை: +977 9851289445
  • நேபாள இராணுவம்: +977 9851072914 (மின்னஞ்சல்: dgmi-foreign@nepalarmy.mil.np)
  • என்டிஆர்ஆர்எம்ஏ: +977 9851320269 / +977 9849281097 / @NDRRMA_Nepal
  • ரசுவா போலீஸ்: +977 9851254960
  • உதவி தலைமை மாவட்ட அதிகாரி, ரசுவா: +977 9851164422
  • நுவாகோட் போலீஸ்: +977 9851282380
  • உதவி தலைமை மாவட்ட அலுவலர், நுவாகோட்: +977 9851248777
  • தாடிங் காவல்துறை: +977 9851229860
  • தலைமை மாவட்ட அதிகாரி, தாடிங்: +977 9851247777
  • சித்வான் காவல்துறை: +977 9855013999
  • உதவி தலைமை மாவட்ட அதிகாரி, சித்வான்: +977 9855088891