ETV Bharat / international

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நட்பு நாடுகளுக்கு சிறப்பு கட்டண சலுகை - சீனாவுக்கான ஈரான் தூதர் அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணையை கடந்து செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் நட்பு நாடுகளுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நட்பு நாடுகளுக்கு சிறப்பு கட்டண சலுகை - சீனாவுக்கான ஈரான் தூதர்
ஹார்முஸ் நீரிணை பகுதியில் நட்பு நாடுகளுக்கு சிறப்பு கட்டண சலுகை - சீனாவுக்கான ஈரான் தூதர் (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 5, 2026 at 4:54 PM IST

1 Min Read
Choose ETV Bharat

பெய்ஜிங்: ஹார்முஸ் நீரிணையை கடந்து செல்லும் கப்பல்களுக்கு நிச்சயம் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சீனாவுக்கான ஈரான் அப்துல்ரெசா ரஹ்மானி ஃபாஸ்லி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த யோசனையை அமெரிக்கா நிராகரித்துள்ளதால், நட்பு நாடுகள் சிறப்பு சலுகைகளை பெறும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஈரான் மற்றும் ஆதரவு படைகளுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் போர் மூண்டதை அடுத்து, தமது முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முழுயைமாக மூடியது. இதனால் சரக்கு கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சர்வதேச அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல், எல்பிஜி ஆகியவற்றின் இறக்குமதி தடைபட்டு சர்வதேச அளவில் எரிபொருள் விலை அதிகரித்தது.

இதையும் படிங்க.. ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு ஆன்லைனில் கொலை மிரட்டல் - போலீஸ் விசாரணை

இதையடுத்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஜூன் 17ஆம் தேதி உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி, ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் ஒப்புக்கொண்டு, வர்த்தக கப்பல்கள் 60 நாட்களுக்கு கட்டணமின்றி ஹார்முஸ் நீரிணையை கடக்கலாம் என்று நிபந்தனை விதித்திருந்தது. ஆனால் 60 நாட்களுக்கு பிறகு என்ன நடமுறை இருக்கும் என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்நிலையில், சீனா தலைநகர் பெய்ஜிங்கில் உலக அமைதி மன்ற கூட்டம், சனிக்கிழமை நடைபெற்றது. அதில், ஈரானிய தூதர் அப்துல்ரெசா ரஹ்மானி ஃபாஸ்லி கலந்து கொண்டு பேசுகையில், "ஹார்முஸ் நீரிணை வழித்தடத்திற்கான புதிய ஏற்பாடுகள் குறித்து ஓமன் அரசுடன் ஈரான் அரசு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஹார்முஸ் நீரிணை, எங்கள் கடற்பரப்பின் ஒரு பகுதியாக இருப்பதால், அந்த வழியாக கடக்கும் சரக்கு கப்பல்களுக்கு நிச்சயம் சேவை கட்டண் வசூலிக்கப்படும். அந்த கட்டணம் சுங்க கட்டணமாக இருக்காது.

இந்தப் புதிய ஏற்பாடுகள், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பது, கப்பல்களின் போக்குவரத்தைக் கண்காணிப்பது, கப்பல்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கையாள்வதற்கு உத்தரவாதம் அளிப்பது ஆகியவை குறித்து இருக்கும். அதேசமயம், கடினமான காலங்களில் எங்களுடன் துணையாக நின்ற நாடுகளுக்கும், நட்பு நாடுகளுக்கும் சிறப்புச் சலுகைகளை வழங்குவது குறித்து பரிசீலிப்போம்" என்று தெரிவித்தார்.

தெற்காசிய போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அமெரிக்காவுடன் மேற்கொண்ட தொடக்க கட்ட ஒப்பந்தத்திற்கு பின்னர், ஹார்முஸ் நீரிணை மீதான முற்றுகையை ஈரான் விலக்கிக் கொண்டது. மேலும் இந்த விவகாரத்தில் நிரந்தர தீவு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.