ETV Bharat / entertainment

’டாக்ஸிக்’ திரைப்படத்தின் வசூல் பெரும் சரிவு - இரண்டாம் நாள் நிலவரம் என்ன?

யாஷ் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படம் இரண்டாம் நாள் வசூலில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் 2 படத்தின் வசூலை விட இரண்டு மடங்கு பின்தங்கியுள்ளது

டாக்ஸிக் போஸ்டர்
டாக்ஸிக் போஸ்டர் (Film Poster)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 28, 2026 at 10:09 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ’டாக்ஸிக்’ திரைப்படம் இரண்டாம் நாள் வசூலில் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

பிரபல சினிமா வர்த்தக இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, டாக்ஸிக் திரைப்படம் வெளியான இரண்டாவது நாளில், இந்தியாவில் 22,629 காட்சிகள் திரையிடப்பட்டு, 36.40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் இந்திய அளவில் மொத்தமாக 137.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மொத்தமாக உலகளவில் வசூல் கணக்கு 164.50 கோடி ரூபாயாக உள்ளது. முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய டாக்ஸிக் திரைப்படம், இரண்டாம் நாளில் கூடுதலாக 64 கோடி ரூபாய் மட்டுமே வசூல் பெற்றுள்ளது. ஒரே நாளில் 64 சதவீதம் வசூல் குறைந்துள்ளது.

மொழி வாரியாக இந்தியில் அதிகபட்சமாக இந்தியில் 16,251 காட்சிகள் திரையிடப்பட்டு, 23 கோடி ரூபாய் வசூல் பெற்றுள்ளது. தொடர்ந்து கன்னட மொழியில், 1,678 காட்சிகள் திரையிடப்பட்டு, 8.50 கோடி ரூபாய் வசூல் பெற்றுள்ளது. பின்னர் தெலுங்கு மொழியில் 2,325 காட்சிகள் திரையிடப்பட்டு, 3 கோடி ரூபாய் வசூல் பெற்றுள்ளது. தமிழ் மொழியில் 2016 காட்சிகளில் 1.50 கோடி ரூபாயும், மலையாளத்தில் 359 காட்சிகளில் 40 லட்ச ரூபாயும் வசூல் ஈட்டியுள்ளது.

வட இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வரும் டாக்ஸிக் திரைப்படம், நேற்று வெளியாகி 2வது நாளில், 26.25 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. கர்நாடகாவில் 10.75 கோடி ரூபாயும், தமிழ்நாட்டில் 1.75 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது.

’துரந்தர் 2’ படத்தை விட குறைவு

பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட டாக்ஸிக் திரைப்படம் பாலிவுட்டில் வெளியான ’துரந்தர் 2’ வெற்றி படத்தின் வசூலை முறியடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் இரண்டாவது வசூலில் ’துரந்தர் 2’ திரைப்படம் டாக்ஸிக் திரைப்படத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக பெற்றுள்ளது.

இதையும் படிங்க: கையில் அரிவாள்... நெற்றியில் பட்டை... ரிலீஸ் தேதியுடன் வெளியானது 'ரணபலி' பட போஸ்டர்

ரன்வீர் சிங் திரைப்படம் வெளியான இரண்டாவது நாளில் சாக்னில்க் வெளியிட்ட தரவுகளின்படி, 80.72 கோடி ரூபாய் வசூல் ஆனது. ஆனால் டாக்ஸிக் திரைப்படம் 37.50 கோடி ரூபாய் மட்டுமே வசூலை பெற்றுள்ளது. வார இறுதியில் டாக்ஸிக் திரைப்படம் வசூல் அதிகரிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும டாக்ஸிக் திரைப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இதில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.