விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ரொமான்டிக் காதல் கதை - ஒரு பார்வை
‘the girlfriend' திரைப்பட புரமோஷனில் ராஷ்மிகா, நான் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்வேன் என்று பகிரங்கமாக கூறியிருந்தார்.

Published : February 26, 2026 at 5:32 PM IST
ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ரொமான்டிக் காதல் கதை குறித்து இந்த செய்தியில் காணலாம்.
தென்னிந்திய திரையுலகத்தின் வைரல் ஜோடியான விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் உதய்பூரில் இன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இருவரும் பிரபல நடிகர்களாக இருந்து வரும் நிலையில், ’கீதா கோவிந்தம்’ படத்தில் தங்களது சினிமா வாழ்க்கையில் ஆரம்ப காலகட்டத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர். ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில், பின்னர் தங்களது காதல் கதையை பொதுமக்களுக்கு தெரியாதவாறு ரகசியமாக பாதுகாத்து வந்தனர்.
‘நேஷனல் க்ரஷ்’ என அழைக்கப்படும் ரஷ்மிகா மந்தனாவிடம் அவரது காதல் குறித்து வெளியாகும் கிசுகிசு குறித்து கேட்கப்பட்டபோது, 'தமது காதல் குறித்து வலம் வரும் தகவல்களை கேட்க நன்றாக உள்ளது' என்றார். மேலும் விஜய் தேவரகொண்டா உடனான நட்பு குறித்து பேசுகையில், "நாங்கள் இருவரும் எங்கள் சினிமா வாழ்க்கை ஆரம்ப காலத்தில் ஒன்றாக நடித்துள்ளோம். எங்களுக்கு சினிமா உலகத்தை பற்றி தெரியாதபோது, நண்பர்களாக மாறினோம். எங்களுக்கு நிறைய பொதுவான நண்பர்கள் பலர் உள்ளனர்" என்றார்.
அப்போது முதலே ஊடகங்களில் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவி வந்த நிலையில்ம், பின்னர் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா சமூக வலைதள பதிவுகளில் உள்ள ஒற்றுமைகளை ரசிகர்கள் கவனித்து வந்தனர். 2023 -ம் ஆண்டு முதல் இருவரது வெளிநாடு பயணங்கள் தொடர்பான புகைப்படங்களை வைத்து காதலிப்பதாக ரசிகர்கள் கூறி வந்தனர்.
ரசிகர்களின் இந்த யூகத்தை உறுதிபடுத்தும் விதத்தில் ராஷ்மிகாவின் 29 -வது பிறந்தநாள், 2026 புத்தாண்டு கொண்டாட்டம் உள்ளிட்ட பல நிகழ்வுகளை இருவரும் ஒன்றாக கொண்டாடியதை தங்களகு சமூக வலைதள பதிவுகளின் மூலம் வெளிப்படுத்தினர்.
இந்த கணிப்புகள் அனைத்தையும் உறுதி செய்யும் வகையில், சமீபத்தில் நடைபெற்ற ‘the girlfriend' திரைப்பட புரமோஷனில் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்வேன். மேலும் எனது இணையர், அவர் ஏற்படுத்தாத வலிகளில் இருந்து என்னை மீட்டெடுத்தார் என்று உணர்ச்சிவசமாக பேசியிருந்தார்.
அதுமட்டுமின்றி "விஜய் தேவரகொண்டா உடனான காதல் குறித்து கேட்டபோது ராஷ்மிகா, “விரைவில் முறைப்படி அறிவிப்போம்” என கூறினார். தங்களது காதலை ரகசியமாக பாதுகாத்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ஹைதராபாதில் உள்ள விஜய் தேவரகொண்டா வீட்டில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் வெளியானது.

