ETV Bharat / entertainment

இளையராஜா இசையில் மயக்கும் ‘முத்துமணி’ பாடல் - ’டோரதி’ திரைப்படத்தின் மியூசிக் வீடியோ வெளியீடு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ’டோரதி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இளையராஜா
இளையராஜா (Screengrab/ Youtube Sony Music South)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 29, 2026 at 1:43 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: இளையராஜா இசையில், ’டோரதி’ திரைப்படத்தின் முத்துமணி பாடலின் மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை இளையராஜா, ஸ்வேதா மோகன் பாடியுள்ளனர். மேலும் சிறப்பம்சமாக இந்த பாடலை இளையராஜாவே எழுதியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் இடம் பெறும் காட்சியுடன் தொடங்கும் இந்த மியூசிக் வீடியோவில் வரும் இசையமைப்பு, இளையராஜா 80-களில் இசையமைத்த பாடல்களை நினைவுப்படுத்துகிறது. முத்துமணி பாடல் பழைய இசைக்கருவிகளுடன், புதிய கணினி சார்ந்த இசைகோர்ப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடலில் இளையராஜா இசையை கேட்டு ரசிகர்கள் மயங்குவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இதுவரை கார்த்திக் சுப்புராஜ் திரைப்படங்களுக்கு சந்தோஷ் நாராயணன், அனிருத் ஆகியோர் இசையமைத்து வந்த நிலையில், அவரது 10-வது திரைப்படத்திற்கு முதன்முறையாக இளையராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் இளையராஜா இசையமைக்கும் 1540-வது திரைப்படம் இதுவாகும். இந்த படத்தின் முதல் பாடல் ‘கல்யாண விருந்து’ வெளியானது முதல் ’டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. அந்த பாடல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் ட்ரெண்டான நிலையில், இளையராஜா ’கம்பேக்’ என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் இந்த பாடலை கேட்ட இயக்குநர் வெங்கட் பிரபு கார்த்திக் சுப்புராஜை பாராட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ”OG இளையராஜாவை மீண்டும் கொண்டு வந்த கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி, இந்த பாடல் கண்டிப்பாக தியேட்டர்களில் கொண்டாட்டமாக இருக்கும்” என கூறியிருந்தார். அதே போல் மேலும் சில நெட்டிசன்கள், நவீன இசை உலகில், இளையராஜாவின் ‘கல்யாண விருந்து’ பாடலை கேட்பது 80களின் பாடல்களை நினைவூட்டுவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

இந்நிலையில், இன்று வெளியான டோரதி திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘முத்துமணி’ பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: ‘மண்டாடி’ திரைப்படம் சீனாவில் ரூ. 1,000 கோடி வசூல் செய்யும் - நடிகர் சத்யராஜ் உறுதி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘டோரதி’. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும் சிறப்பம்சமாக இந்த திரைப்படம் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்கு செல்லும் திரைப்படம் என்ற சாதனையை ’டோரதி’ பெறவுள்ளது.