ETV Bharat / entertainment

கடைசி நேரத்தில் பொங்கல் ரேஸில் களமிறங்கும் ’வா வாத்தியார்’ - கார்த்தி ரசிகர்கள் மகிழ்ச்சி

நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ படத்தில் கார்த்தி, கீர்த்தி செட்டி, ராஜ்கிரண், இளவரசு, கருணாஸ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

வா வாத்தியார் போஸ்டர்
வா வாத்தியார் போஸ்டர் (@StudioGreen2)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 10, 2026 at 9:39 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ’வா வாத்தியார்’ திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி செட்டி, ராஜ்கிரண், இளவரசு, கருணாஸ், சத்யராஜ், ஆனந்தராஜ் ஆகியோரது நடிப்பிலும், சந்தோஷ் நாராயணன் இசையிலும் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில், ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பலமுறை தள்ளிப்போனது.

கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என திட்டமிடப்பட்டிருந்தது. அப்போதும் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது படக்குழுவின் சர்ப்ரைஸான ரிலீஸ் அறிவிப்பு, கார்த்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் ’வா வாத்தியார்’ படமானது வருகின்ற 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த முறை பொங்கல் திரைப்படங்கள் ரேஸில் ஜனநாயகன் மற்றும் பராசக்தி இடம் பெற்றிருந்தது. ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. பராசக்தி திரைப்படம் இன்று (ஜன.10) வெளியான நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் வெற்றிடத்தை ’வா வாத்தியார்’ திரைப்படம் நிரப்பும் என நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே போல வா வாத்தியார் திரைப்படத்தை பொறுத்தவரை நடிகர் கார்த்தியும், இயக்குநர் நலன் குமாரசாமியும், முதன்முதலாக இணைந்துள்ளனர். இதில் தீவிர எம்.ஜி.ஆரின் ரசிகனாகவும், காவல்துறை அதிகாரியாகவும் கார்த்தி நடித்துள்ளார். நிஜ வாழ்வில் எம்ஜிஆரின் தீவிர பக்தனான சத்யராஜ் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் எம்ஜிஆர் தான் உடற்பயிற்சிக்கு பயன்படுத்திய கர்லா கட்டையை உண்மையாகவே ஒரு காட்சியில் நடிகர் ஆனந்தராஜ் பயன்படுத்தி நடித்திருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அமரனை விட ’பராசக்தி’ மிகப் பெரிய ஹிட் - ரசிகர்களுடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன் பேட்டி

வித்தியாசமான கதை களங்களை தேர்வு செய்து நடிக்க கூடிய நடிகர் கார்த்தியும், சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற முற்றிலும் மாறுபட்ட திரைப்படங்களை இயக்கியிருக்க கூடிய இயக்குனர் நலன் குமாரசாமி இருவரும் இணைந்துள்ள வா வாத்தியார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.