ETV Bharat / entertainment

’ஜெயிலர் 2’ ரிலீஸ் தேதியில் மாற்றம்? - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்

’ஜெயிலர் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது

’ஜெயிலர் 2’ போஸ்டர்
’ஜெயிலர் 2’ போஸ்டர் (@sunpictures)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 2, 2026 at 4:32 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: 'ஜெயிலர் 2' படத்தின் வெளியீட்டு தேதியை மீண்டும் உறுதி செய்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

’ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முன்பே அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் அனிருத் பின்னணி இசையமைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி 'ஜெயிலர் 2' திரைப்படம் ரிலீஸ் ஆகாது என்றும், அப்படம் தீபாவளி பண்டிகைக்கு தள்ளி வைக்கப்படலாம் என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர்.

அத்தகைய தகவல்களுக்கு பதிலளிக்கும் விதமாக வரும் அக்டோபர் 15ஆம் தேதி 'ஜெயிலர் 2' திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ரிலீஸ் தேதி குறித்த மறு அறிவிப்பு ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிள் 'அல்ல போலேலோ' பாடல் கடந்த வாரம் வெளியான நிலையில், ஜென்சி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. அதே நேரத்தில், ஒரு சிலர் இந்த பாடல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தனர். இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கடும் நிலையில், அந்த பாடல் ’Hukum’ போன்று ரஜினிகாந்தின் மாஸ் பாடலாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் பெரிதும் எதிர்பார்க்கடும் ’ஜெயிலர் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘கூலி’ திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. இதனைத்தொடர்ந்து ரஜினியின் பிளாக்பஸ்டர் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ‘ஐ அம் கேம்’ படத்தில் நடிப்பதற்கு முதலில் பயமாக இருந்தது - மனம் திறந்த நடிகர் துல்கர் சல்மான்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தில் நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு தோற்றம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில், இரண்டாம் பாகத்தில் பாலிவுட் நடிகர் ஹிருதிக் ரோஷன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.