ETV Bharat / entertainment

ஜனநாயகன் டிக்கெட் கட்டணம் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் - கோவில்பட்டி திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்

கோவில்பட்டி தனியார் திரையரங்கம்
கோவில்பட்டி தனியார் திரையரங்கம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 1:28 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தூத்துக்குடி: ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், கோவில்பட்டியில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் டிக்கெட் முன்பதிவு பணத்தை ரசிகர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடித்த ’ஜனநாயகன்’ திரைப்படம் வரும் 9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வெளியாக இருந்தது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி பல்வேறு திரையரங்குகளில் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்தன.

நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வந்தனர். மேலும் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், அவரது கடைசி படம் என்பதால் ஜனநாயகன் படத்திற்கு தென்னிந்திய அளவில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை குழு மறுத்துவிட்டது.

இந்தப் படத்தில் மத உணர்வை புண்படுத்தும் வகையில் வசனம் இருப்பதாகவும், 14 காட்சிகளை நீக்கக்கோரி படக்குழுவினரிடம் தெரிவித்ததாகவும் தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் படத்தை மறு தணிக்கை குழு பார்த்த பின்பு தான் சன்றிதழ் வழங்க முடியும் என உயர்நீதிமன்றத்தில் தணிக்கை குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.

இதனிடையே தவிர்க்க முடியாத காரணங்களால் ’ஜனநாயகன்’ திரைப்படம் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. மேலும் ஐரோப்பிய நாடுகள், மலேசியா, சிங்கப்பூரிலும் திரைப்பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஜனநாயகன் டிக்கெட் முன்பதிவை தொடங்கிய பல்வேறு திரையரங்குகள் ரசிகர்களுக்கு பணத்தை திருப்பி அளித்து வருகிறது.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சத்தியபாமா, லட்சுமி மற்றும் சண்முகா திரையரங்குகளில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், பட்த்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப தர முடிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 'ஜனநாயகன்' படத்திற்கு சென்சார் சான்று கிடைக்குமா? காலை வெளியாகிறது தீர்ப்பு... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

கோவில்பட்டி சத்தியபாமா திரையரங்க நிர்வாகம் இன்று (ஜன.9) முதல் ஆன்லைன் மற்றும் நேரடியாக வந்து முன்பதிவு செய்தவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மற்ற திரையரங்குகளும் டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளன.