ETV Bharat / entertainment

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் இவ்வளவு வயது வித்தியாசமா?

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் 'கீதா கோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 26, 2026 at 1:57 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு 'VIROSH' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பிரபல காதல் ஜோடியின் திருமணத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த நிலையில், இருவருக்குமான வயது வித்தியாசம் என்ன என்பதை அறியும் ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம் விராஜ்பெட்டில் கடந்த 1996ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி ராஷ்மிகா மந்தனா பிறந்தார். அவருக்கு தற்போது வயது 29. அதேபோல் விஜய் தேவரகொண்டா ஹைதராபாதில் கடந்த 1989ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி பிறந்தார். அவருக்கு தற்போது வயது 36. இருவருக்கும் 7 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்தாலும், திரையிலும் சரி, பொதுவெளியிலும் சரி நல்ல கெமிஸ்ட்ரியும், புரிதலும் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'கீதா கோவிந்தம்' படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இருவரது கெமிஸ்ட்ரி அப்போதே பெரிய அளவில் பேசப்பட்டது. பின்னர் டியர் காம்ரெட் (dear comrade) படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இருவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இருவரும் காதலித்து வருவதாக அப்போதே செய்திகள் பரவியன. பட விளம்பர நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் ஒன்றாக தோன்றினர். பின்னர் இந்த ஜோடி சமூக வலைதள பக்கத்தில் வெளியிடும் பதிவுகளில் ஒற்றுமை இருப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்தனர். ரஷ்மிகா பங்கேற்ற நிகழ்ச்சிகளில், "விஜய் தேவரகொண்டாவுடன் காதலா?" என கேள்விகள் எழுப்பப்பட்டபோதெல்லாம் அவர் வெட்கத்துடன்கூடிய சிரிப்பையே பதிலாக அளித்தார்.

இதையும் படிங்க: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறு; ரஜினிகாந்த் முக்கிய கோரிக்கை

சமீபத்தில் அவர் பங்கேற்ற சினிமா நிகழ்வில் 'நாங்கள் நேரம் வரும்போது அதுகுறித்து தெரிவிப்போம்' என பதிலளித்தார்.

இந்நிலையில் இன்று (பிப்.26) காலை விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் உதய்பூரில் உள்ள ஐடிசி மெமண்டோஸ் சொகுசு ஹோட்டலில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வரும் மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாதில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில், அரசியல், திரைத் துறை பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.