ETV Bharat / entertainment

தனுஷ் ‘தமிழக எழுச்சி கழகம்’ கட்சியை தொடங்கினாரா? உண்மை நிலவரத்தை உடைத்த நற்பணி மன்ற தலைவர்!

ரசிகர் மன்றத்தை வலுப்படுத்துவதே முனைப்பாக இருக்க வேண்டும் என்று நடிகர் தனுஷ் கூறியதாக அகில இந்திய தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் - கோப்புப்படம்
நடிகர் தனுஷ் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : October 8, 2026 at 10:07 AM IST

3 Min Read
Choose ETV Bharat

-By ஐயப்ப மூர்த்தி

சென்னை: நடிகர் தனுஷின் அரசியல் தொடர்பான செய்திகள் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது பேசுபொருளாக இருந்து வருகின்றன.

தற்பொழுது ‘தமிழக எழுச்சி கழகம்’ எனும் பெயரில், தனுஷ் புதிய கட்சியை தொடங்கி உள்ளார் போன்ற தகவல்கள் பல ஊடகங்களில் வந்த நிலையில், அதன் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து அலசிப் பார்க்கலாம்.

விஜய்க்குப் பிறகு அரசியலில் நுழையும் தனுஷ்?

நடிகர் தனுஷின் ரசிகர் மன்ற நடவடிக்கைகள் மற்றும் அவர் பேசிய சில கருத்துகள் காரணமாக, அவரது அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பு விவாதமாக வெடித்துள்ளது. ‎தனுஷ் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அரசியல் கட்சியையும் தான் தொடங்குவதாக அறிவிக்கவில்லை என்றாலும், பேச்சுக்கள் ஓயாமல் அசைபோடப்பட்டு வருகிறது.

அவரது ரசிகர் மன்றங்கள் ஏற்கனவே பல்வேறு நலத்திட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் ரத்ததான முகாம்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனிடையே, தனுஷின் ரசிகர் அமைப்பு சார்பில் நடிகரின் புகைப்படம் இடம்பெற்ற கொடி வெளியிடப்பட்டது, அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.

சமூக வலைதளங்களில் பரவிய தனுஷின் பேச்சு

குறிப்பாக ‘எண்ணம்போல் தான் வாழ்க்கை’ என்ற வாசகத்துடன் இருந்த அந்தக் கொடி தொடர்பான செய்திகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. ‎சமீபத்தில் நடந்த ரசிகர் மன்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், ரசிகர்கள் ஒன்றாக திரள்வது ஒரு சக்தி என்றும், அந்த சக்தியை திரைப்பட நிகழ்ச்சிகளுடன் மட்டும் நிறுத்தாமல் மக்கள் நலப்பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

‎மேலும், உங்களது பகுதியில் வசிக்கும் மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்றும் அவர் தனது ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த பேச்சு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது.

நடிகர் விஜய் ரசிகர் மன்ற நலப்பணிகளில் இருந்து அரசியல் கட்சியை தொடங்கியதைப் போல, தனுஷும் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் நல அமைப்பாக வலுப்படுத்துகிறாரா என்ற ஒப்பீடுகளும் உருவாகின.

இதே நேரத்தில், தனுஷ் அரசியலில் ஈடுபடுவது குறித்து அவரது தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’ என்ற வகையில் பதிலளித்ததாக செய்திகள் வெளியாகின.

இதனால், தனுஷின் அரசியல் பயணம் குறித்த விவாதம் மேலும் தீவிரமடைந்தது. பின்னர் 72-ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய தனுஷிடம், அரசியல் கட்சி எப்போது தொடங்கப் போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு அவர் பதில் அளிக்காமல் சிரித்தபடி சென்றார்.

தனுஷின் படத்தை சுட்டிக்காட்டி பேசிய கனிமொழி

இந்த சம்பவமும் தனுஷின் அரசியல் எதிர்காலம் குறித்த ஊகங்களுக்கு காரணமாக அமைந்தது. கடந்த மாதம் இறுதியில் தமிழக அரசியல் விவாதத்திலும் தனுஷின் பெயர் நேரடியாக இடம்பெற்றது. தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையில் தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி, முதலமைச்சர் விஜய்யை விமர்சிக்கும் சூழலில் தனுஷின் திரைப்படமான வேலையில்லா பட்டதாரியை குறிப்பிட்டுப் பேசினார்.

இதையும் படிங்க
  1. ‘மருதநாயகம்’ படத்துல இவங்க 2 பேரும் நடிச்சா மாஸா இருக்கும் - உயிர்கொடுத்த அட்லி பேச்சு
  2. இவைதான் தமிழ் சினிமாவின் தலைசிறந்த 3 திரைப்படங்கள் - 'டோரதி' வெற்றி விழாவில் மனம் திறந்த மிஷ்கின்
  3. போர்ச்சுகல் கார் பந்தயத்திற்கு ஆதரவு கோரும் அஜித்குமார் - வீடியோ வைரல்

‎அப்போது, தனுஷ் அரசியலுக்கு வந்துவிட்டார் என்ற பொருள்படும் வகையில் அவர் தெரிவித்த கருத்து மீண்டும் அரசியல் அரங்கில் தனுஷின் பெயரை பேச வைத்தது. இருப்பினும், தனுஷ் இதுவரை, தனது அரசியல் கட்சியின் பெயர், கொள்கை, நிர்வாகிகள், தேர்தல் திட்டம் அல்லது எந்த அரசியல் இயக்கத்திலும் அதிகாரப்பூர்வமாக இணைவது குறித்து அறிவிக்கவில்லை.

தனுஷின் அரசியல் கட்சி என்பது தவறான தகவல்

இந்த நிலையில் இது தொடர்பாக அகில இந்திய தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் சுப்பிரமணிய சிவா ஈடிவி பாரத்திற்கு பிரத்தியேகமாக தொலைபேசி மூலமாக அளித்துள்ள பேட்டியில், “தனுஷ் ‘தமிழக எழுச்சி கழகம்’ என்கிற பெயரில் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார் என்கிற தவறான தகவலை ஒரு சில ஊடகங்கள் விளம்பரத்திற்காக வெளியிடுகிறார்கள்.

அகில இந்திய தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் சுப்பிரமணிய சிவா
அகில இந்திய தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் சுப்பிரமணிய சிவா (ETV Bharat Tamil Nadu)

தற்பொழுது ரசிகர் மன்றத்தை வலுப்படுத்துவதை எங்களுடைய முனைப்பாக இருக்கிறது. எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் நடிகர் தனுஷ் நேரடியாக செய்தியாளர் சந்திப்பு வைத்து மக்கள் அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்பார். ‎தற்பொழுது கட்சி தொடங்கியது தொடர்பான அவர் ஏதாவது ஒரு கருத்தை தெரிவித்தால் அதுவே அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தி ஆகிவிடும். இது தவறான செய்தி” என தெரிவித்துள்ளார்.