ETV Bharat / entertainment

’பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவின் வினோத முயற்சி - நிவின் பாலி நடித்த குறும்படம் வைரல்

ஃபகத் ஃபாசில் தயாரிப்பில் நிவின் பாலி, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்த ’பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் தமிழில் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது.

’பெத்லகேம் குடும்ப யூனிட்’ போஸ்டர்
’பெத்லகேம் குடும்ப யூனிட்’ போஸ்டர் (Fb @Nivin pauly)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 2, 2026 at 7:38 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: ’பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்திற்கு படக்குழு மேற்கொண்ட வித்தியாசமான விளம்பர முயற்சி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிகர் சங்கீத் பிரதாப் ஜோயல் டேவிஸ் என்ற கதாபாத்திரத்தில் ஒரு குறும்படர இயக்குநராக நடித்திருந்தார். அவர் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' (Bethlehem Kudumba Unit) படத்தில் இயக்கிய குறும்படத்தை தற்போது தயாரிப்பு நிறுவனமான ’பாவனா ஸ்டுடியோஸ்’ நிறுவனம் யூடியூபில் வெளியிட்டுள்ளனர். அதில் நிவின் பாலி சிறிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். மேலும் மமிதா பைஜூ சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த குறும்படம் பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் கதையின் போக்கில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது இந்த குறும்படம் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ சந்தித்து கொள்வதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்நிலையில், தயாரிப்பு நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

யூடியூபில் வெளியான ’Soulmates - oru saathukkudi pranayam' குறும்படம் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. இந்த குறும்படம் வெளியான 12 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் இந்த குறும்படம், 'பெத்லகேம் குடும்ப யூனிட்' போன்று சுவாரஸ்யமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

பிரேமலு திரைப்பட புகழ் இயக்குநர் கிரீஷ் ஏடி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ, சங்கீத் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்'. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியான இந்த படம், கேரளாவில் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் மிகப்பெரும் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: ’ஜெயிலர் 2’ ரிலீஸ் தேதியில் மாற்றம்? - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்

முன்னணி நடிகர்களான நிவின் பாலி, மமிதா பைஜூ ஆகியோர் நடித்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதனையடுத்து படம் வெளியானது முதல் நெட்டிசன்கள் படத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் நிவின் பாலி, மமிதா பைஜூ ஆகியோரின் நடிப்பு வரவேற்பை பெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை அடுத்து ’பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.