ETV Bharat / entertainment

மிருகம் போன்ற தோற்றத்தில் அல்லு அர்ஜூன்; ’ராக்கா’ படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கிட்டதட்ட 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் ’ராக்கா’ படத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அல்லு அர்ஜூன் நடிக்கும் ராக்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அல்லு அர்ஜூன் நடிக்கும் ராக்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு (IANS/ Film Poster)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 8, 2026 at 4:09 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: அட்லீ, அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகும் ’ராக்கா’ படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் பிரமாண்ட பொருட்செலவில் தயாராகி வருகிறது. கிட்டதட்ட 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மிருணால் தாகூர் உள்ளிட்டோரும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அட்லீ கடைசியாக இயக்கிய ’ஜவான்’ திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில், அட்லீ, அல்லு அர்ஜூன் படம் குறித்து அறிவிப்பு வெளியானது முதல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் captain america, avengers age of ultron உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர் ஜாஸ் பெர்னாண்டஸ் பணிபுரிந்து வருகிறார்.

இப்படம் ’AA22xA6’ என அழைக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதன்படி ’AA22xA6’ படத்திற்கு ’ராக்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. ராக்கா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. மேலும் ராக்கா திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் அல்லு அர்ஜூன் மிருகம் போன்ற தோற்றத்தில் உள்ளார். அந்த தோற்றத்தில் மிருகம் போன்ற கை மற்றும் நகங்களுடன் வித்தியாசமான மேக்கப்பில் உள்ளார்.

இதையும் படிங்க: ஒரு நடிகையாக நயன்தாராவை வெளியே அழைத்து வருவது சிரமம்: விக்னேஷ் சிவன் ஓபன் டாக்

மேலும் இப்படத்தில் அல்லு அர்ஜூன் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ராக்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அட்லீ தனது சமூக வலைதள பக்கத்தில், “ராக்கா ஒரு சாதாரண படம் கிடையாது. நான் கிட்டதட்ட 18 வருடங்கள் இந்த ஐடியாவுடன் பணியாற்றியுள்ளேன். இப்படம் என்னுள் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையாக சொன்னால் இது வெறும் தொடக்கம் தான்” என கூறியுள்ளார்.

ராக்கா திரைப்படம் வரும் 2027ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரமாண்டத்திற்கு பெயர் பெற்றவர் இயக்குநர் ஷங்கர். அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் அட்லீ. அந்த வகையில் ’ராக்கா’ படம் ஷங்கர் பட பாணியில் பிரமாண்டமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.