ETV Bharat / entertainment

‘மண்டாடி’ திரைப்படம் சீனாவில் ரூ. 1,000 கோடி வசூல் செய்யும் - நடிகர் சத்யராஜ் உறுதி

உடல், மனம் ஆகிய இரண்டையும் ஒரு நிலைப்படுத்தி, இயக்குநர் என்ன செய்ய சொன்னாலும் செய்யக்கூடியவர் நடிகர் சூரி என இயக்குநர் வெற்றிமாறன் புகழாரம் சூட்டினார்.

நடிகர் சத்யராஜ்
நடிகர் சத்யராஜ் (Youtube/ RS Infotainment)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 29, 2026 at 11:42 AM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: ‘மண்டாடி’ படம் நிச்சயமாக சீனாவில் ரூ. 1,000 கோடி வரை வசூல் செய்யும் என நடிகர் சத்யராஜ் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மண்டாடி’. இதில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள மண்டாடி திரைப்படம், வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது இந்நிகழ்வில் படத்தில் பணியாற்றிய படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக வெற்றி மாறன், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி மேடையில் பேசுகையில், "சூரி ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்த சங்கமம் திரைப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியானது. அன்று தொடங்கி தற்போது சூரி ஹீரோ ஆக 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. அவர் போராடினார், தன்னுடைய இடத்தை கைவிடவே இல்லை. எதையும் கைவிடாமல் இருந்தால் ஒருநாள் சாதிக்கலாம் என்பதற்கு சூரி மிகப்பெரிய முன்னுதாரணம்” என பாராட்டினார்.

‎நடிகர் சத்யராஜ் பேசுகையில், “நல்ல நடிகனுக்கு பலம் அவரது ரசிகர்கள், சூரி போன்ற சரியான நடிகனுக்கு தான், சரியான ரசிகராக இருக்கிறார்கள். ஏனென்றால் சூரி கடினமான உழைப்பாளி. அவருடைய உழைப்பு அசாத்தியமானது. உயிரை பணயம் வைத்து நடிக்கக்கூடிய காட்சிகளை கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறுவேன். நான் எப்போதுமே இயக்குநர்கள் எதை சொன்னாலும் செய்துவிடுவேன்.

நடிகர் சூரி
நடிகர் சூரி (Youtube/ RS Infotainment)

அந்த வகையில், இந்த படத்தின் இயக்குநர் என்னுடைய கதாபாத்திரம் சொல்லும் போது சாதாரணமாக சொன்னார் இருப்பினும் அதனை வடிவமைக்கும் போது அவர் மிகப்பெரிய அளவு மெனக்கெட்டார். கடலுக்குள் நடிப்பது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது.

இந்த படத்தை சைனாவில் வெளியிட்டால் நிச்சயமாக ரூ. 1,000 கோடி வசூல் செய்யும் ஏனெனில் அங்கு விளையாட்டு தொடர்பான படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அமீர்கானின் ’தங்கல்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. நான் நடித்திருக்க கூடிய ’கனா’ படமும் அங்கு வெளியிடப்பட்டது. அதேபோல, இந்த படத்தையும் அங்கு வெளியிட்டால் நல்ல வசூல் நிச்சயமாக கிடைக்கும்” என்றார்.

இதையும் படிங்க: கவின், நயன்தாரா ஜோடி ரசிகர்களை கவர்ந்ததா? - ‘ஹாய்’ திரைப்படம் எப்படி இருக்கு?

தொடர்ந்து நடிகர் சூரி பேசுகையில், ”எனக்கு கிடைத்திருக்க கூடிய அத்தனை பாராட்டும் இயக்குநர் வெற்றிமாறனையே சேரும். தற்போது, மழை, புயல், வெயில், காற்று எல்லாம் பலமாக அடித்துக் கொண்டிருக்கிறது. இருந்தாலும், வெற்றிமாறன் போட்ட விதையாக நான் வளர்ந்து கொண்டே இருக்கிறேன். என்னிடம் எந்த மாதிரியான கதாபாத்திரமும் கொடுக்கலாம் என இயக்குநர்கள் சொல்வதற்கு வெற்றிமாறன் சாரே மிக முக்கிய காரணமாவார். அவருக்கு நான் என்றைக்கும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்” என கூறினார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “ஒரு நடிகருக்கு மனம் சொல்வதை உடல் செய்ய முடியாது, உடல் சொல்வதை மனம் செய்ய முடியாது. இரண்டையும் ஒரு நிலைப்படுத்தி, இயக்குநர் என்ன செய்ய சொன்னாலும் செய்யக்கூடிய நடிகர் சூரி. நடிகர் சத்யராஜ் சொன்னதை இந்த மேடையில் சற்று மாற்றி கூறுகிறேன் சூரி ஆபத்தான காட்சிகளில் நடிக்க கூடாது என நான் சொல்லவில்லை. இருப்பினும் அதை கூடுமானவரை, பயிற்சி செய்து திட்டமிட்டு விபத்துக்கள் நடக்காத வண்ணம் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என கூறினார்.