ETV Bharat / education-and-career

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் என்று ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 6, 2026 at 5:29 PM IST

|

Updated : May 7, 2026 at 7:48 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், திட்டமிட்டப்படி நாளை (மே 8) காலை 9:30 மணியளவில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சந்திரமோகன் இன்று அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் மார்ச் 26 தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்களில், 7.99 லட்சம் பள்ளி மாணவர்கள், 27 ஆயிரம் தனித்தேர்வர்கள் என மொத்தம் 8.27 லட்சம் பேர் பொதுத்தேர்வை எழுதினர்.

இதனைத்தொடர்ந்து, விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் 6 முதல் தொடங்கி 20 வரை நடைபெற்றது. பணிகள் முடிவடைந்து, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மேலும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதியும், 10 மற்றும் 11-ம் வகுப்பு அரியர் பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதியும் வெளியாக இருந்தது. தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி லட்சக்கணக்கில் மாணவர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, பதவியேற்பு, அமைச்சரவை ஒதுக்கீடு என அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற சூழல் உள்ள நிலையில், திட்டமிட்டப்படி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க: TNEA 2026: பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியது

புதிய அரசு அமைந்ததும், அரசின் ஒப்புதலை பெற்று தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதால், முடிவுகள் வெளியாவது தாமதமாகும் எனவும் தகவல் வெளியாகி இருந்தது. முடிவுகளை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், எப்போது முடிவுகள் வெளியிடப்படும் என்பது குறித்து ஒருநாள் முன்னரே அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டப்படி, நாளை காலை (மே 8) காலை 9:30 மணியளவில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சந்திரமோகன் அறிவித்துள்ளார்.

முடிவுகள் வெளியான பின்னர் மாணவர்கள் அவர்களின் மதிப்பெண்களை https://tnresults.nic.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Last Updated : May 7, 2026 at 7:48 PM IST