ETV Bharat / education-and-career

டிகிரி போதும்; ரயில்வேயில் வேலை - 3,548 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ரயில்வேயில் பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நவம்பர் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : October 12, 2026 at 8:01 AM IST

1 Min Read
Choose ETV Bharat

புது டெல்லி: இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள தொழில்நுட்பம் சாராத பிரிவில் கீழ் உள்ள 3,548 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பம் பெறப்படுகிறது.

இந்தியன் ரயில்வேயில் வேலை எதிர்பார்வரா நீங்கள்? உங்களுக்கான பொன்னான வாய்ப்பு இதுதான். ரயில்வேயில் தொழில்நுட்பம் சாராத பிரிவுகளில் பட்டப்படிப்பு தகுதியில் காலியாக உள்ள 3,548 பணியிடங்களுக்கு விரும்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்படுகிறது. இப்பணி குறித்து விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரயில்வே வேலைவாய்ப்பு

இந்த அறிவிப்பின் மூலம் தலைமை வணிக மற்றும் பயணச்சீட்டு மேற்பார்வையாளர் பதவியில் 127, சரக்கு ரயில் மேலாளர் பதவியில் 2,750, இளநிலை கணக்கு உதவி உடன் தட்டச்சர் பதவியில் 300, மூத்த எழுத்தர் உடன் தட்டச்சர் பதவியில் 371 என காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் சென்னை மண்டலத்தில் மட்டும் 141 காலிப்பணியிடங்கள் உள்ளன.

தகுதிகள் என்னென்ன?

இப்பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பை பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். அதே போன்று அதிகபடியாக 33 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி, ஒபிசி, மாற்றுத்திறனாளி உள்ளிட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை என்ன?

இப்பணியிடங்களுக்கு இரண்டு கட்ட கணினி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவை நடைபெறும். கணினி வழி எழுத்துத் தேர்வில் பொது விழிப்புணர்வு, கணிதம், பொது அறிவு ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கட்டத்தில் தகுதி அடையும் பொருட்டு அடுத்தக்கட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?

தலைமை வணிக மற்றும் பயணச்சீட்டு மேற்பார்வையாளர் பதவிக்கு நிலை 6 கீழ் அடிப்படை சம்பளம் ரூ. 35,400 ஆகும். இதர பதவிகளுக்கு நிலை 5 கீழ் அடிப்படை சம்பளம் ரூ. 29,200 ஆகும்.

விண்ணப்பிப்பது எப்படி?

ரயில்வேயில் இருக்கும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள பட்டதாரிகள் https://www.rrbapply.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை https://rrb.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். இதுவே எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்கள் உள்ளிட்டவர்கள் ரூ. 250 செலுத்தினால் போதும்.

முக்கிய நாட்கள்

விவரம்தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள்06.11.2026
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்08.11.2026
விண்ணப்பம் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் 09.11.2026 முதல் 18.11.2026

இந்தியன் ரயில்வே உள்ள இப்பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியுள்ளவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தின் வழியாக கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.