ETV Bharat / education-and-career

சென்னை ஐஐடி ‘சாரங் 2026’ திருவிழா: ஜனவரி 8-ல் தொடங்கி வைக்கிறார் தோட்டா தரணி

சென்னை ஐஐடியின் வருடாந்திர கலை நிகழ்ச்சியான சாரங் 2026 ஜனவரி 8 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சென்னை ஐஐடி ‘சாரங் 2026’ கலைத் திருவிழா தொடர்பாக செய்தியாளர்களை சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி சந்தித்துப் பேசினார்.
சென்னை ஐஐடி ‘சாரங் 2026’ கலைத் திருவிழா தொடர்பாக செய்தியாளர்களை சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி சந்தித்துப் பேசினார். (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 6, 2026 at 7:56 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: மெட்ராஸ் ஐஐடியின் வருடாந்திர கலைத் திருவிழாவான ‘சாரங் 2026’-ஐ திரைப்பட கலை இயக்குநர் தோட்டாதரணி தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த ஆண்டின் ‘சாரங் 2026’, ஜனவரி 8 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக 500 கல்லூரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 25 முதல் 30 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் கலை சார்ந்த போட்டிகளில் பங்கு பெற அனுமதிக்கப்படவுள்ளனர்.

நாடு முழுவதிலும் இருந்து சுமார் 80,000 பார்வையாளர்கள் ‘சாரங் 2026’ நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.

இந்த ஆண்டு நிகழ்வுகள், எல்லைகளுக்கு அப்பால் (Beyond Realms) என்ற கருப்பொருளுடன் நடத்தப்படவுள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் கிளாசிக்கல் நைட் நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக, இசைக் கலைஞர்கள் ஸ்ரீமதி விஜயலட்சுமி மற்றும் ஸ்ரீ லால்குடி கிருஷ்ணன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தொடர்ந்து சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவரான ஸ்ரீ பிரசன்னா ராமசாமியின் கிடார் இசை நிகழ்ச்சி நடைபெறும்.

சென்னை ஐஐடி ‘சாரங் 2026’ திருவிழா (ETV Bharat Tamil Nadu)

கலை நிகழ்ச்சிகளில் திரைப்பட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நடன இயக்குநர் கலா, சிவாங்கி கிருஷ்ணகுமார், கரேஷ்மா ரவிச்சந்திரன், முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய கலைஞர்களும், பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர்.

சாரங் 2026-ல் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் பட்டியலை இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி வெளியிட்டார். அதன்படி,

  • மாடல் யூஎன் (Model UN) - கலைஞர்கள் இடையிலான கலந்துரையாடல்
  • உலக திருவிழா (World Festival) - ஜாஸ் முதல் ஹிப்ஹாப் வரையில், உலக நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் நிகழ்த்தும் இசை நிகழ்ச்சி
  • சாரங் ஜெனரல் சாம்பியன்ஷிப் - கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றிபெற்று அதிகம் புள்ளிகளை பெறுவோருக்கு ‘சாரங் ஜெனரல் சாம்பியன்ஷிப்’ பட்டம் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.
  • ‘காலா’ சமூக செயல்பாடு - இந்நிகழ்வின் ஒரு பகுதியான ‘காலா’ சமூக செயல்பாட்டு தளத்தின் வாயிலாக கைவினைக் கலைஞர்கள் உருவாக்கிய பொருட்களை விற்பனை செய்ய, சென்னை ஐஐடியின் சாரங் 2026 திருவிழாவின் போது வளாகங்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.
  • நோவா எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் - பண்டைய இந்திய கலைகள் குறித்த காட்சி பெட்டகமாக இது இருக்கும் என்று ஐஐடி இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த தளத்தை பார்வையாளர்கள் பயன்படுத்தி, தங்களின் திறமைகளை வெளிப்படுத்த முடியும்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியின் புதிய அடையாளமான குளோபல் மையத்தை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

மேலும், சாரங் 2026 கலைத் திருவிழாவில் நடைபெறும் போட்டிகளுக்கு ரூ.10,000 முதல் ரூ.1.2 லட்சம் வரை பரிசுகள் கொடுக்கப்படும் என்றும், அனைவருக்கும் அனுமதி இலவசம் என்றாலும், பிரபலங்கள் கலந்து கொள்ளும் சில நிகழ்ச்சிகளுக்கு உள்நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.