ETV Bharat / business

உலகின் முன்னணி பங்குச்சந்தைகள் பட்டியல் - இந்தியாவை பின்னுக்கு தள்ளிய தென் கொரியா

உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தை பட்டியலில் கனடா 8-வது இடத்திலும், இங்கிலாந்து 9-வது இடத்திலும் உள்ளன.

மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தை (ANI)
author img

By PTI

Published : June 2, 2026 at 1:50 PM IST

1 Min Read
Choose ETV Bharat

மும்பை: உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தை பட்டியலில் 5.04 டிரில்லியன் அமெரிக்க டாலருடன் இந்தியாவை பின்னுக்கு தள்ளி தென் கொரியா முன்னேறியுள்ளது.

அமெரிக்கா - ஈரான் மோதல் குறித்து முதலீட்டாளர்கள் கவலை கொண்டுள்ளனர். மேலும் போர் விவகாரத்தில் நிலையான ஒப்பந்தம் மேற்கொள்ள எடுக்கப்பட்ட ராஜதந்திர முயற்சிகள் அனைத்தும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இதுபோன்ற காரணங்களால், இந்திய பங்குச்சந்தையின் குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இன்று (ஜூன் 02) காலை தொடக்கத்திலேயே சரிவைக் கண்டது. மேலும், தொடர்ச்சியான அந்நிய முதலீடுகள் வெளியேற்றமும் பங்குச்சந்தையின் சரிவுக்கு காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிஎஸ்இ சென்செக்ஸ் இன்று தொடக்கத்தில் 296.19 புள்ளிகள் சரிந்து 73,971.30 புள்ளிகளாகவும், என்எஸ்இ நிஃப்டி 103.30 புள்ளிகள் சரிந்து 23,272.25 ஆகவும் உள்ளது. சென்செக்ஸில் உள்ள பஜாஜ் ஃபைனான்ஸ், எடேர்னல், பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிட், எல்&டி, என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தன. இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா, எச்.சி.எல் டெக், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபம் ஈட்டின.

இதற்கிடையே நேற்று (ஜூன் 01) மாலை நிலவரப்படி, வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் ரூபாய் 3,911.68 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். அதேபோல், சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 0.73% சரிந்து 94.29 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகிறது.

உலகளவிலான பங்குச்சந்தையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய தென்கொரியா

உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தை பட்டியலில் 79.47 ட்ரில்லியன் அமெரிக்க டாலருடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 15.09 ட்ரில்லியன் அமெரிக்க டாலருடன் சீனா இரண்டாவது இடத்திலும், 8.63 ட்ரில்லியன் அமெரிக்க டாலருடன் ஜப்பான் மூன்றாவது இடத்திலும், 7.24 ட்ரில்லியன் அமெரிக்க டாலருடன் ஹாங்காங் நான்காவது இடத்திலும், 5.15 ட்ரில்லியன் அமெரிக்க டாலருடன் தைவான் ஐந்தாவது இடத்திலும், 5.04 ட்ரில்லியன் அமெரிக்க டாலருடன் தென்கொரியா ஆறாவது இடத்திலும் உள்ளது.

இதையும் படிங்க: ரூ. 46 உயர்ந்த வணிக சிலிண்டர் விலை; பெட்ரோல், டீசல் விலையும் உயர்வு

4.84 ட்ரில்லியன் அமெரிக்க டாலருடன் இந்தியா ஏழாவது இடத்திலும், 4.53 ட்ரில்லியன் அமெரிக்க டாலருடன் கனடா எட்டாவது இடத்திலும், 3.94 ட்ரில்லியன் அமெரிக்க டாலருடன் இங்கிலாந்து ஒன்பதாவது இடத்திலும், 3.45 ட்ரில்லியன் அமெரிக்க டாலருடன் பிரான்ஸ் பத்தாவது இடத்திலும் உள்ளன.