ETV Bharat / business

தொடர்ந்து விலை உயர்ந்து வரும் தங்கம்- போட்டி போட்டு அதிகரிக்கும் வெள்ளி விலை

வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 8 ஆயிரம் அதிகரித்து, ஒரு கிலோ, ரூ. 2,07,000க்கு விற்பனையாகி வருகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 10, 2025 at 10:20 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.96,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உலகப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை காரணமாக, பங்குச் சந்தைகளுடன் ஒப்பிடுகையில் சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது தங்கம். பொதுவாக தங்க சுரங்கத்தில் உற்பத்தியின் அளவு குறைவாக இருக்கும் போது சந்தைகளில் அதன் விலை மிகவும் அதிகமாக இருக்கும். தற்போது உற்பத்தி குறைவாக இருப்பதுடன், மற்ற முதலீடுகளின் மீதான நம்பகத் தன்மை குறைந்திருப்பதே தங்கத்தின் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை

கடந்த சில வாரங்களாக சற்று குறைந்து, சிறிய ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலையானது ஒரு சில நாட்களுக்கு முன்பாக சட்டென ஏறத் தொடங்கியது. தற்போது ரூ. 96 ஆயிரத்தை தொட்டுள்ள ஒரு சவரன் தங்கம் விலையானது சொற்ப ஏற்ற இறக்கங்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று (டிச.9) சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 96,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 240 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 96,240-க்கு விற்பனையாகி வருகிறது. அதன்படி நேற்றை விட இன்று (டிச.10) கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு ரூ. 12,030-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ. 1 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், அதன் மீது முதலீடு செய்ய முடியாதவர்கள் தங்கள் கவனத்தை வெள்ளி பக்கம் திருப்பியுள்ளனர். அதனால் வெள்ளி விலையும் நாளுக்கு நாள் தாறுமாறாக ஏறி வருகிறது. நேற்று (டிச.9) கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ. 199-க்கு விற்பனையாக நிலையில், இன்று ஒரே நாளில் ரூ. 8 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 207-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இன்று ஒரு கிலோவுக்கு ரூ. 8 ஆயிரம் அதிகரித்து ரூ. 2,07,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் காவல் துறை கடமை தவறிவிட்டது - கௌசல்யா குற்றச்சாட்டு

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ.12,030

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ.96,240

வெள்ளி 1 கிராம் - ரூ.207

வெள்ளி 1 கிலோ - ரூ.2,07,000

கடந்த 10 நாட்களுக்கான 22 காரட் தங்கத்தின் விலை

தேதிகிராம் விலை (ரூ.)சவரன் விலை (ரூ.)
டிசம்பர் 10ரூ.12,030ரூ.96,240
டிசம்பர் 9ரூ.12,000ரூ.96,000
டிசம்பர் 8ரூ.12,040ரூ.96,320
டிசம்பர் 7ரூ.12,040ரூ.96,320
டிசம்பர் 6ரூ.12,040ரூ.96,320
டிசம்பர் 5ரூ.12,000ரூ.96,000
டிசம்பர் 4ரூ.12,020ரூ.96,160
டிசம்பர் 3ரூ.12,060ரூ.96,480
டிசம்பர் 2ரூ.12,040ரூ.96,320
டிசம்பர் 1ரூ.12,070ரூ.96,560