ETV Bharat / business

இன்று அதிரடியாக சரிந்த தங்கம் விலை - சவரனுக்கு ரூ. 2,120 குறைவு

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 20 ஆயிரம் குறைந்து, ரூ. 2 லட்சத்துக்கு 95 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 4, 2026 at 10:37 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,120 குறைந்து, ரூ. 1,21,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக உலக நாடுகளிடையே வர்த்தக பிரச்னை தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ள நிலையில் கடல் வழி வணிகத்தில் தாமதம் ஏற்படும் என பல்வேறு நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. பொதுவாக போர் நடைபெற்றால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை தேர்ந்தெடுக்கும் நோக்கில், தங்கத்தின் மீது முதலீடு செய்வர்.

ஆனால் இப்போது போர் காரணமாக பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்து வருகிறது. அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் தங்கம் விலை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. போர் தொடங்கிய முதல் நாளில் தங்கம் விலை உச்சம் தொட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் விலை குறைந்து வருகிறது.

தங்கம் விலை

ஆபரண தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 3) கிராமுக்கு ரூ. 195 குறைந்து ஒரு கிராம் ரூ. 15,465க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 265 குறைந்து ஒரு கிராம் ரூ. 15,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 1,480 குறைந்து ரூ. 1,23,720க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 2,120 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,21,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

நேற்று வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமின்றி ஒரு கிராம் ரூ. 315-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 20 குறைந்து, ஒரு கிராம் ரூ. 295-க்கு விற்கப்படுகிறது. அதன்படி, கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,95,000க்கு விற்கப்படுகிறது.

இதையும் படிங்க: உலகின் முக்கிய நீர்வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது ஈரான்; அதிர்ச்சியில் உலக நாடுகள்

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 15,200

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,23,720

வெள்ளி 1 கிராம் - ரூ. 295

வெள்ளி 1 கிலோ - ரூ. 2,95,000

கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை

தேதிகிராம் விலை (ரூ.)சவரன் விலை (ரூ.)
மார்ச் 4ரூ. 15,200ரூ. 1,21,600
மார்ச் 3ரூ. 15,465ரூ. 1,23,720
மார்ச் 2ரூ.15,660ரூ.1,25,280
மார்ச் 1ரூ.15,775ரூ.1,26,200
பிப்ரவரி 28ரூ.15,550ரூ.1,24,400
பிப்ரவரி 27ரூ.14,900ரூ.1,19,200
பிப்ரவரி 26ரூ.14,920ரூ.1,19,360
பிப்ரவரி 25ரூ.14,930ரூ.1,19,440
பிப்ரவரி 24ரூ.14,890ரூ.1,19,120
பிப்ரவரி 23ரூ.14,860ரூ.1,18,880