ETV Bharat / business

அதிர்ச்சி கொடுத்த தங்கம்; ஆறுதல் அளித்த வெள்ளி - இன்றைய விலை நிலவரம்

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.268-க்கும், கிலோவுக்கு ரூ.4000 குறைந்து ரூ.2,68,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 11:31 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 50 ரூபாயும், சவரனுக்கு 400 ரூபாயும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் 12,800 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,02,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

2026 ஜனவரி 1 ஆம் தேதி தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 440-க்கும், சவரன் விலை 99 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை ஒரு லட்சத்துக்கு கீழ் வந்ததால் நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், 2 ஆம் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 640-க்கும், ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 580-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ. 12,750-க்கும், சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ.1,02,000-க்கும் விற்பனையானது. கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வந்த தங்கம் விலை நேற்று சரிந்தது.

தங்கம் விலை

இந்த நிலையில், இன்று (ஜன 9) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகாரித்து ரூ.12,800-க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 102,400-க்கும் விற்பனை செய்யப்படுக்கிறது. இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 அதிகரித்து ரூ. 13,963-க்கும், சவரனுக்கு ரூ.432 அதிகரித்து ரூ. 111,704-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி இன்று கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.268-க்கும், கிலோவுக்கு ரூ.4000 குறைந்து ரூ.2,68,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ.12,800

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் -ரூ.1,02,400

வெள்ளி 1 கிராம் -ரூ.268

வெள்ளி 1 கிலோ -ரூ.2,68,000

கடந்த 10 நாட்களுக்கான 22 காரட் தங்கத்தின் விலை

தேதிகிராம் விலை (ரூ.)சவரன் விலை (ரூ.)
ஜனவரி 9ரூ.12,800ரூ.102,400
ஜனவரி 8ரூ.12,750ரூ.102,000
ஜனவரி 7ரூ.12,800ரூ.102,400
ஜனவரி 6ரூ.12,830ரூ. 102,640
ஜனவரி 5ரூ.12,760ரூ.1,02,080
ஜனவரி 4ரூ.12,600ரூ.100,800
ஜனவரி 3ரூ.12,600ரூ.100,800
ஜனவரி 2ரூ.12,580ரூ.100,640
ஜனவரி 1ரூ.12,440ரூ.99,520
டிசம்பர் 31ரூ.12,480ரூ.99,840