தங்கம் வெள்ளி விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?
வெள்ளி விலை கிாரமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.271-க்கும்,கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்து ரூ.2,71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Published : January 6, 2026 at 12:39 PM IST
சென்னை: ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாயும், சவரனுக்கு 560 ரூபாயும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் 12,830 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,02,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் (டிச 31) ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது. அதனைத் தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தின் முதலே தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இன்று ஒரு சவரன் தங்க விலை ரூ. 102,640- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,600-க்கும், ஒரு சவரன் ரூ. 1,00,800-க்கும் விற்பனையானது. நேற்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,01,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலையில் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மாலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,02,080-க்கு விற்பனையானது.தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்தது.
தங்கம் விலை
இந்த நிலையில், இன்றும் (ஜன 6) தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 அதிகரித்து ரூ.12,830-க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 102,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.76 அதிகரித்து ரூ. 13,996-க்கும், சவரனுக்கு ரூ.608 அதிகரித்து ரூ.111,968-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
மேலும், இன்று வெள்ளி விலை கிாரமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.271-க்கும்,கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்து ரூ.2,71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்:
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ.12,830
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் -ரூ. 1,02,640
வெள்ளி 1 கிராம் -ரூ.271
வெள்ளி 1 கிலோ -ரூ.2,71,000
கடந்த 10 நாட்களுக்கான 22 காரட் தங்கத்தின் விலை
| தேதி | கிராம் விலை (ரூ.) | சவரன் விலை (ரூ.) |
| ஜனவரி 6 | ரூ.12,830 | ரூ. 102,640 |
| ஜனவரி 5 | ரூ.12,760 | ரூ.1,02,080 |
| ஜனவரி 4 | ரூ.12,600 | ரூ.100,800 |
| ஜனவரி 3 | ரூ.12,600 | ரூ.100,800 |
| ஜனவரி 2 | ரூ.12,580 | ரூ.100,640 |
| ஜனவரி 1 | ரூ.12,440 | ரூ.99,520 |
| டிசம்பர் 31 | ரூ.12,480 | ரூ.99,840 |
| டிசம்பர் 30 | ரூ.12,600 | ரூ.1,00,800 |
| டிசம்பர் 29 | ரூ.13,020 | ரூ.104,160 |
| டிசம்பர் 28 | ரூ.13,100 | ரூ.104,800 |
| டிசம்பர் 27 | ரூ.13,100 | ரூ.104,800 |

