ETV Bharat / business

மீண்டும் சரசரவென உயர்ந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,840 அதிகரிப்பு

வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் அதிகரித்து ரூ. 2 லட்சத்து 70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிரநிதித்துவ படம்
பிரநிதித்துவ படம் (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 6, 2026 at 10:45 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 1,840 அதிகரித்து ரூ. 1,12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது தங்கம். மேலும், இந்தியர்களின் முக்கிய சேமிப்புகளில் ஒன்றாகவும் இருக்கிறது. அரிய உலோகங்களில் ஒன்றான தங்கத்தின் மதிப்பானது, உலக சந்தையில் நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்று வருகிறது. முதலீடு என்றாலே பங்குச்சந்தை தான் என்ற நிலையானது கடந்த 2 ஆண்டுகளில் தலைகீழாக மாறியிருக்கிறது.

ஏனெனில் பங்குச்சந்தைகள் அடி வாங்கும்போது முதலீட்டாளர்கள் உடனடியாக தங்கத்தின் மீது முதலீடுகளை திருப்பி விடுகின்றனர். இதனால் தங்கத்தின் மதிப்பு விறுவிறுவென உயர்ந்துகொண்டே போகிறது. உலகளாவிய பண வீக்கம் மற்றும் டாலர் மதிப்பின் நிச்சயமற்ற தன்மை காரணமாக உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் சேமிப்பை தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். இதுவே தங்கம் விலை ஏறுவதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

தங்கம் விலை

மூன்று நாட்கள் தங்கம் விலை மாறாமல் விற்பனையாகி வந்த நிலையில், நேற்று (மே 5) கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ. 13,820க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கிராமுக்கு ரூ. 230 அதிகரித்து ரூ. 14,050க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 1,440 குறைந்து ரூ. 1,10,560க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 1,840 அதிகரித்து ரூ. 1,12,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை ரூ. 5 என்ற அளவில் தினந்தோறும் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. அதன்படி, நேற்று (மே 5) ரூ. 5 குறைந்து ரூ. 265க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 5 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 270க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இன்று கிலோவுக்கு ரூ. 5000 அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,70,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: அ.தி.மு.க - த.வெ.க இடையே பேச்சுவார்த்தை: லால்குடி எம்.எல்.ஏ லீமா ரோஸ் தகவல்

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ.14,050

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ.1,12,400

வெள்ளி 1 கிராம் - ரு. 270

வெள்ளி 1 கிலோ - ரூ. 2,70,000

கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை

தேதிஒரு கிராம் தங்கம் (ரூ.)சவரன் விலை (ரூ.)
மே 6ரூ.14,050ரூ.1,12,400
மே 5ரூ.13,820ரூ.1,10,560
மே 4ரூ.14,000ரூ.1,12,000
மே 3ரூ.14,000ரூ.1,12,000
மே 2ரூ.14,000ரூ.1,12,000
மே 1ரூ.13,920ரூ.1,11,360
ஏப்ரல் 30ரூ.14,100ரூ.1,12,800
ஏப்ரல் 29ரூ.13,900ரூ.1,11,200
ஏப்ரல் 28ரூ.14,100ரூ.1,12,800
ஏப்ரல் 27ரூ.14,230ரூ.1,13,840