3 நாட்கள் மாறாமல் இருந்த தங்கம் விலை - இன்று சவரனுக்கு ரூ. 1,440 குறைவு
வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 65 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Published : May 5, 2026 at 11:39 AM IST
சென்னை: 3 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையான நிலையில் இன்று சவரனுக்கு ரூ. 1,440 குறைந்திருக்கிறது.
ஆபரண தங்கத்தின் விலையானது கணிக்க முடியாத வகையில் தினந்தோறும் மாறி வருகிறது. இதற்கு உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
உலக அளவிலான பொருளாதாரத்தை பொறுத்தவரை பெரும்பாலும் டாலரில் தான் பரிவர்த்தனைகள் நடக்கின்றன. எனவே டாலர் மதிப்பு அதிகமாக இருக்கும்போது முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளின் மீது தங்கள் கவனத்தை செலுத்துவர். அதுவே, டாலர் மதிப்பு குறையும்போது, பாதுகாப்பான முதலீடான தங்கத்தை தேர்ந்தெடுப்பர். அப்போது உலக சந்தையில் தங்கத்தின் மதிப்பு கூடும்.
தற்போது, டாலர் மதிப்பு நல்ல நிலையில் இருப்பதால் முதலீட்டாளர்கள் டாலரின் மீது வர்த்தகம் செய்து வருகின்றனர். இதனால் தங்கம் விலை குறைந்து வருகிறது.
தங்கம் விலை
கடந்த 3 நாட்களாக தங்கம் விலை மாறாமல் இருந்த நிலையில் இன்று குறைந்திருக்கிறது. சனிக்கிழமை (மே 2) கிராமுக்கு ரூ. 80 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 14,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 180 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,820க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, மே 1 அன்று சவரனுக்கு ரூ. 640 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,12,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 1,440 குறைந்து ரூ. 1,10,560க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
கடந்த வாரம் முழுவதும் வெள்ளி விலை ரூ. 5 மட்டும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. மே 1ஆம் தேதி கிராமுக்கு ரூ. 5 அதிகரித்து ரூ. 270க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 5 குறைந்து ரூ. 265க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இன்று கிலோவுக்கு ரூ. 5000 குறைந்து ரூ. 2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
| இதையும் படிங்க: ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் |
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ.13,820
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ.1,10,560
வெள்ளி 1 கிராம் - ரு. 265
வெள்ளி 1 கிலோ - ரூ. 2,65,000
கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை
| தேதி | ஒரு கிராம் தங்கம் (ரூ.) | சவரன் விலை (ரூ.) |
| மே 5 | ரூ.13,820 | ரூ.1,10,560 |
| மே 4 | ரூ.14,000 | ரூ.1,12,000 |
| மே 3 | ரூ.14,000 | ரூ.1,12,000 |
| மே 2 | ரூ.14,000 | ரூ.1,12,000 |
| மே 1 | ரூ.13,920 | ரூ.1,11,360 |
| ஏப்ரல் 30 | ரூ.14,100 | ரூ.1,12,800 |
| ஏப்ரல் 29 | ரூ.13,900 | ரூ.1,11,200 |
| ஏப்ரல் 28 | ரூ.14,100 | ரூ.1,12,800 |
| ஏப்ரல் 27 | ரூ.14,230 | ரூ.1,13,840 |
| ஏப்ரல் 26 | ரூ.14,200 | ரூ.1,13,600 |

