ETV Bharat / business

வெறும் ரூ.80 குறைந்த தங்கம் விலை - இன்று சவரன் எவ்வளவு?

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.295க்கும், ஒரு சவரன் ரூ. 2 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 26, 2026 at 10:29 AM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு வெறும் ரூ.80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 1,19,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரண தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொடர் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதற்கு இந்த மாத தொடக்கத்தில் மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதியை குறைத்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்க டாலர் மதிப்பின் நிலையற்ற தன்மை மாறி, தற்போது வலுபெற்று வருவதால் உலக வர்த்தகத்தில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.

இதன் காரணமாக முதலீட்டாளர்களும் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறும் நோக்கில் தங்கத்தை விற்பனை செய்து, பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியிருக்கின்றனர். இதுபோன்ற காரணிகள் குறுகிய கால தங்கம் விலை சரிவுக்கு காரணங்களாக சொல்லப்படுகிறது. இருப்பினும் விலை குறைவானது நிரந்தரமில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

தங்கம் விலை

தொடர்ந்த 3 நாட்களாக தங்கம் விலை குறைந்த அளவில் அதிகரித்து வந்த நிலையில் இன்று மிகவும் சொற்ப அளவில் குறைந்திருக்கிறது. நேற்று (பிப்.25) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 40 அதிகரித்து ரூ. 14,930க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு வெறும் ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ. 240 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,19,440க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,19,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

மத்திய பட்ஜெட் அறிவிப்புக்கு பின் வெள்ளி விலை கிடுகிடுவென இறங்கிய நிலையில், தற்போது ஒரு கிராம் ரூ. 300 என்ற அளவிலேயே ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த வாரத்தில் தொடர்ந்து 5 நாட்கள் வெள்ளி விலையில் மாற்றமில்லாத நிலையில், அடுத்தடுத்த நாட்களில் சிறு ஏற்ற இறக்கங்களை கண்டுவருகிறது. நேற்றைக்கு முன் தினம் கிராமுக்கு ரூ. 10 குறைந்த நிலையில், நேற்று (பிப். 25) ரூ. 5 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 295க்கு விற்பனையானது. அதன்படி ஒரு கிலோ வெள்ளியானது ரூ. 2,95,000க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்றும் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது.

இதையும் படிங்க: நீங்கள் இன்னும் சாகவில்லை - நல்லகண்ணுவின் மறைவை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த மூதாட்டி

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 14,920

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,19,360

வெள்ளி 1 கிராம் - ரூ. 295

வெள்ளி 1 கிலோ - ரூ. 2,95,000

கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை

தேதிகிராம் விலை (ரூ.)சவரன் விலை (ரூ.)
பிப்ரவரி 26ரூ.14,920ரூ.1,19,360
பிப்ரவரி 25ரூ.14,930ரூ.1,19,440
பிப்ரவரி 24ரூ.14,890ரூ.1,19,120
பிப்ரவரி 23ரூ. 14,860ரூ. 1,18,880
பிப்ரவரி 22ரூ.14,680ரூ.1,17,440
பிப்ரவரி 21ரூ.14,680ரூ.1,17,440
பிப்ரவரி 20ரூ.14,420ரூ.1,15,360
பிப்ரவரி 19ரூ.14,500ரூ.1,16,000
பிப்ரவரி 18ரூ.14,230ரூ.1,13,840
பிப்ரவரி 17ரூ.14,320ரூ.1,14,560