தொடர்ந்து 3வது நாளாக உயர்ந்த தங்கம் விலை - சவரன் ரூ. 1,19,400க்கு விற்பனை
வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் அதிகரித்து ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 95 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Published : February 25, 2026 at 11:17 AM IST
சென்னை: ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3 நாட்களாக உயர்ந்துவரும் நிலையில் இன்று சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,19,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நீண்டகால மற்றும் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிற தங்கம் விலை தினந்தோறும் ஏற்ற இறக்கம் கண்டுவருகிறது. சமீப காலமாக இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் தினசரி விலை மாற்றம் ஏற்படுகிறது. இதற்கு பணவீக்கம், உலக நாடுகள் பாதுகாப்பான முதலீட்டை தேர்ந்தெடுப்பது, முதலீட்டாளர்களின் தேவை போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.
இந்தியாவை பொருத்தவரை நாணய ஏற்ற இறக்கங்கள், பண்டிகை மற்றும் திருமண தேவைகளுக்காக தங்கத்தின் உள்நாட்டு தேவை அதிகரிப்பு போன்றவை தினசரி விலையை நிர்ணயிக்கின்றன. அதுபோக பங்குச்சந்தைகளில் வட்டி விகிதம் குறையும்போது தங்கம் முதலீட்டாளர்களை கவர்கின்றன. இதனால் சாமானியர்கள்தான் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
தங்கம் விலை
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று (பிப். 24) கிராமுக்கு ரூ. 30 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 14,890க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 40 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 14,930க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 240 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,19,120க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 320 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,19,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
| இதையும் படிங்க: திடீர் சாம்பார், திடீர் இட்லியை போல கட்சியை தொடங்குகிறார்கள்: சசிகலாவை விமர்சித்த டிடிவி தினகரன் |
வெள்ளி விலை
கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதங்களில் தங்கத்தை விட அதிக சதவீதத்தில் வெள்ளி விலை ஏற்றம் கண்ட நிலையில், கடந்த ஓரிரு வாரங்களில் சரசரவென குறைந்தது. அதிகபட்சமாக ஒரு கிராம் ரூ. 425க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 125 ரூபாய் குறைந்திருக்கிறது. நேற்று கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 290க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 5 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 295க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று கிலோவுக்கு ரூ. 5,000 அதிகரித்து ரூ. 2,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 14,930
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,19,440
வெள்ளி 1 கிராம் - ரூ. 295
வெள்ளி 1 கிலோ - ரூ. 2,95,000
கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை
| தேதி | கிராம் விலை (ரூ.) | சவரன் விலை (ரூ.) |
| பிப்ரவரி 25 | ரூ.14,930 | ரூ.1,19,440 |
| பிப்ரவரி 24 | ரூ.14,890 | ரூ.1,19,120 |
| பிப்ரவரி 23 | ரூ. 14,860 | ரூ. 1,18,880 |
| பிப்ரவரி 22 | ரூ.14,680 | ரூ.1,17,440 |
| பிப்ரவரி 21 | ரூ.14,680 | ரூ.1,17,440 |
| பிப்ரவரி 20 | ரூ.14,420 | ரூ.1,15,360 |
| பிப்ரவரி 19 | ரூ.14,500 | ரூ.1,16,000 |
| பிப்ரவரி 18 | ரூ.14,230 | ரூ.1,13,840 |
| பிப்ரவரி 17 | ரூ.14,320 | ரூ.1,14,560 |
| பிப்ரவரி 16 | ரூ.14,440 | ரூ.1,15,520 |

