ETV Bharat / business

சவரனுக்கு ரூ. 240 உயர்ந்த தங்கம் விலை - சவரன் எவ்வளவு?

வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ. 10 ஆயிரம் குறைந்து ரூ. 2 லட்சத்து 90 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 24, 2026 at 10:50 AM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரித்து, ரூ. 1,19,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரத்தில் தொடர்ந்து 3 நாட்கள் குறைந்த தங்கம் விலை அடுத்த 3 நாட்களில் அடுத்தடுத்து ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலையேற்றம் ஏற்கனவே கணிக்கப்பட்டது தான் என்றாலும், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் ஒரு சவரன் ரூ. 1.20 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அமெரிக்க வரி விகிதம், உலக நாடுகளிடையேயான போர் பதற்றம் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.

கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் தங்கம் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டு ஆண்டு இறுதிக்குள் ரூ. 2 லட்சத்தை தொடும் என்று நிபுணர்கள் கணித்திருக்கின்றனர். இருப்பினும், டிரம்ப் நிர்வாகத்தில் நல்ல முடிவு, போர்சூழலில் மாற்றம் போன்றவை நிகழ்ந்தால் தங்கம் விலை குறைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

தங்கம் விலை

நேற்று (பிப். 23) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 180 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,860-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,890-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 1,440 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,18,880-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 240 உயர்ந்து ரூ. 1,19,120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை சில நாட்களாக மாற்றமின்றி விற்கப்பட்ட நிலையில் கடந்த வார இறுதியில் கிராமுக்கு ரூ. 20 அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து நேற்றும் ரூ. 10 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 300-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இன்று கிலோவுக்கு ரூ. 10,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: தீ விபத்தில் சிக்கியவரை கொண்டு சென்ற 'ஆம்புலன்ஸ் விமானம்' விழுந்து விபத்து: 7 பேர் பலி

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 14,890

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,19,120

வெள்ளி 1 கிராம் - ரூ. 290

வெள்ளி 1 கிலோ - ரூ. 2,90,000

கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை

தேதிகிராம் விலை (ரூ.)சவரன் விலை (ரூ.)
பிப்ரவரி 24ரூ.14,890ரூ.1,19,120
பிப்ரவரி 23ரூ. 14,860ரூ. 1,18,880
பிப்ரவரி 22ரூ.14,680ரூ.1,17,440
பிப்ரவரி 21ரூ.14,680ரூ.1,17,440
பிப்ரவரி 20ரூ.14,420ரூ.1,15,360
பிப்ரவரி 19ரூ.14,500ரூ.1,16,000
பிப்ரவரி 18ரூ.14,230ரூ.1,13,840
பிப்ரவரி 17ரூ.14,320ரூ.1,14,560
பிப்ரவரி 16ரூ.14,440ரூ.1,15,520
பிப்ரவரி 15ரூ.14,560ரூ.1,16,480