ETV Bharat / business

'ஷாக்' அடிக்கும் தங்கம் விலை - ரூ.1 லட்சத்தை தாண்டியது சவரன்

தங்கத்திற்கு போட்டியாக வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 1 கிராம் வெள்ளி இன்று மாலை நிலவரப்படி ரூ.215-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்க நகை
தங்க நகை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 15, 2025 at 10:34 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: கடந்த 3 நாட்களாக ஒரே விலையில் நீடித்து வந்த தங்கம் விலை, அதிரடியாக இன்று ஒரே நாளில் இரு முறை உயர்ந்து சவரன் ரூ. 1 லட்சத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி சவரன் ரூ.97,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து, டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த 12 ஆம் தேதி ஒரே நாளில் 2 முறை உயர்ந்து, கடந்த 2 நாட்களாக அதே விலை நீடித்து வந்தது. அதன்படி, தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12,370-க்கும், ஒரு சவரன் ரூ.98,960-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அமெரிக்காவில் பெடரல் வங்கி வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், தங்கம் விலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை, இன்று ஒரே நாளில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு, பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

தங்கம் விலை

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,460-க்கும், சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,680-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரு சவரன் தங்கம் எந்த நேரத்திலும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இன்று மாலையும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது கிராமுக்கு மேலும் 55 ரூபாயும், சரவனுக்கு மொத்தமாக ரூ.1160-ம் உயர்ந்தது. இதனையடுத்து ஒரு சவரன் தங்கம் விலை இதுவரை இல்லாத புதிய உச்சமாக ரூ.1,00,120 ஆக உயர்ந்தது.

வெள்ளி விலை

தங்கத்தைப் போன்று வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு இன்றுகாலை 3 ரூபாயும், மாலையில் ரூ.2-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.215-க்கும், ஒரு கிலோ ரூ.2,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னை பறக்கும் ரயிலை வாங்க தமிழ்நாடு அரசு திட்டம் - மெட்ரோவுடன் இணைக்க வியூகம்

தங்கம் மற்றும் வெள்ளி விலை மாலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ.12,515

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ.1,00,120

வெள்ளி 1 கிராம் - ரூ.215

வெள்ளி 1 கிலோ - ரூ.2,15,000

கடந்த 10 நாட்களுக்கான 22 காரட் தங்கத்தின் விலை

தேதிகிராம் விலை (ரூ.)சவரன் விலை (ரூ.)
டிசம்பர் 15ரூ.12,515ரூ.1,00,120
டிசம்பர் 14ரூ.12,370ரூ.98,960
டிசம்பர் 13ரூ.12,370ரூ.98,960
டிசம்பர் 12ரூ.12,370ரூ.98,960
டிசம்பர் 11ரூ.12,050ரூ.96,400
டிசம்பர் 10ரூ.12,030ரூ.96,240
டிசம்பர் 9ரூ.12,000ரூ.96,000
டிசம்பர் 8ரூ.12,040ரூ.96,320
டிசம்பர் 7ரூ.12,040ரூ.96,320
டிசம்பர் 6ரூ.12,040ரூ.96,320