ETV Bharat / business

புதிய உச்சம் தொட்ட தங்கம் - சவரனுக்கு ரூ.1600 உயர்வு

வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் ரூ.215-க்கும், கிலோ வெள்ளி ரூ.2,15,000-க்கும் விற்பனையாகிறது.

தங்க நகை
தங்க நகை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 12, 2025 at 10:06 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,250-க்கும், சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.98 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை விலை நிலவரம், தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் சந்தித்து வருகிறது. இத்துடன் அமெரிக்காவில் பெடரல் வங்கி வட்டிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கம் விலை, இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,050க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று அதிரடியாக கிராமுக்கு ரூ.200 அதிகரித்து நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கம் விலை

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,250-க்கும், சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.218 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,363-க்கும், சவரனுக்கு ரூ.1744 அதிகரித்து ஒரு சவரன் ரூ.106,904- க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களாக ரூ.96 ஆயிரத்திலேயே நீடித்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ரூ.98 ஆயிரத்தை தொட்டுள்ளது. கூடிய விரைவில் ஒரு லட்சத்தை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வெள்ளி விலை

நேற்றைய தினம் கிராம் வெள்ளி ரூ.209-க்கு விற்பனையான நிலையில், இன்று அதிரடியாக கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் ரூ.215-க்கும், கிலோ வெள்ளி ரூ.2,15,000-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியலில் 74 லட்சம் வாக்காளர்கள் வரை நீக்கப்பட வாய்ப்பு

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ.12,250

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ.98,000

வெள்ளி 1 கிராம் - ரூ.215

வெள்ளி 1 கிலோ - ரூ.2,15,000

கடந்த 10 நாட்களுக்கான 22 காரட் தங்கத்தின் விலை

தேதிகிராம் விலை (ரூ.)சவரன் விலை (ரூ.)
டிசம்பர் 12ரூ.12,250ரூ.98,000
டிசம்பர் 11ரூ.12,050ரூ.96,400
டிசம்பர் 10ரூ.12,030ரூ.96,240
டிசம்பர் 9ரூ.12,000ரூ.96,000
டிசம்பர் 8ரூ.12,040ரூ.96,320
டிசம்பர் 7ரூ.12,040ரூ.96,320
டிசம்பர் 6ரூ.12,040ரூ.96,320
டிசம்பர் 5ரூ.12,000ரூ.96,000
டிசம்பர் 4ரூ.12,020ரூ.96,160
டிசம்பர் 3ரூ.12,060ரூ.96,480