தங்கம் சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு - இன்றைய விலை நிலவரம் என்ன?
வெள்ளி விலை கிராம் ரூ.209-க்கும், ஒரு கிலோ ரூ.2,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Published : December 11, 2025 at 10:41 AM IST
சென்னை: 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.96,400-க்கும், கிராம் ரூ.12,050-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வரலாற்று உச்சத்தை தொட்டு நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதில் மாத தொடக்கத்திலேயே அதிகரித்த தங்கம் விலை அவ்வப்போது குறைந்தாலும் கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்றைய தினம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து கிராம் ரூ.12,030-க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து சவரன் ரூ.96,240க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (டிச.11) தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,050-க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.22 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,145-க்கும், சவரனுக்கு ரூ.176 அதிகரித்து ஒரு சவரன் ரூ.105,160- க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களாக தங்கம் விலை ரூ.96 ஆயிரத்திலேயே நீடித்து வருகிறது. பங்குச்சந்தை முதலீடுகள் நிச்சயமற்றதாக மாறிவரும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.207-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.209-க்கும், ஒரு கிலோ ரூ.2,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாத தொடக்கத்தில் கிராம் ரூ.196-க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளி விலை கடந்த 10 நாட்களில் ரூ.13 அதிகரித்து இன்று ஒரு கிராம் ரூ.209-க்கு விற்பனையாகிறது.
| இதையும் படிங்க: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்பிக்க இன்றே கடைசி நாள் |
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ.12,050
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ.96,400
வெள்ளி 1 கிராம் - ரூ.209
வெள்ளி 1 கிலோ - ரூ.2,09,000
கடந்த 10 நாட்களுக்கான 22 காரட் தங்கத்தின் விலை
| தேதி | கிராம் விலை (ரூ.) | சவரன் விலை (ரூ.) |
| டிசம்பர் 11 | ரூ.12,050 | ரூ.96,400 |
| டிசம்பர் 10 | ரூ.12,030 | ரூ.96,240 |
| டிசம்பர் 9 | ரூ.12,000 | ரூ.96,000 |
| டிசம்பர் 8 | ரூ.12,040 | ரூ.96,320 |
| டிசம்பர் 7 | ரூ.12,040 | ரூ.96,320 |
| டிசம்பர் 6 | ரூ.12,040 | ரூ.96,320 |
| டிசம்பர் 5 | ரூ.12,000 | ரூ.96,000 |
| டிசம்பர் 4 | ரூ.12,020 | ரூ.96,160 |
| டிசம்பர் 3 | ரூ.12,060 | ரூ.96,480 |
| டிசம்பர் 2 | ரூ.12,040 | ரூ.96,320 |

