ETV Bharat / business

சவரனுக்கு ரூ. 800 உயர்ந்த தங்கம் விலை - இன்று விலை எவ்வளவு?

வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ. 7 ஆயிரம் அதிகரித்து ரூ. 2,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 10, 2026 at 10:51 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 12,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்தே தங்கத்தின் விலை விறுவிறுவென ஏறி, ஆண்டு இறுதியில் ரூ. 1 லட்சத்தைத் தாண்டியது. இந்த ஆண்டும் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது.

கடந்த ஆண்டு தங்கத்தின் விலை ஏறத்தாழ 64 சதவீதம் அதிகரித்த நிலையில் இந்த ஆண்டு விலையேற்றமானது தொடரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக, பிப்ரவரியில் விலையேற்றமானது 2.1 சதவீதம் இருக்கலாம் என கூறுகின்றனர். இந்த விலையேற்றமானது சிறிதளவில் நகை வாங்குவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், முதலீட்டாளர்களுக்கு லாபமாகத்தான் அமைந்திருக்கிறது எனவும் கூறுகின்றனர்.

தங்கம் விலை

நேற்று (ஜன 9) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.12,800-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (ஜன 10) மீண்டும் கிராமுக்கு ரூ. 100 அதிகரித்து, ரூ. 12,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 400 அதிகரித்து ரூ. 1,02,400-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 800 அதிகரித்து ரூ.1,03,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: கிலோவுக்கு ரூ.10,000: தங்கத்துக்கு போட்டியாளராக மாறிய மதுரை மல்லி!

வெள்ளி விலை

கடந்த ஆண்டு இறுதியில் தங்கத்திற்கு போட்டியாக ஏறி வந்த வெள்ளி விலையானது இந்த ஆண்டு தொடக்கத்தில் சற்று குறைந்தது. நேற்று (ஜன 9) கிராமுக்கு ரூ. 4 குறைந்து ரூ. 268க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 7 அதிகரித்து ரூ. 275க்கு விற்பனையாகிறது. அதன்படி, நேற்று கிலோவுக்கு ரூ. 4000 குறைந்து ரூ. 2,68,000க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ. 7000 அதிகரித்து, ரூ. 2,75,000க்கு விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ.12,900

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் -ரூ.1,03,200

வெள்ளி 1 கிராம் -ரூ.275

வெள்ளி 1 கிலோ -ரூ.2,75,000

கடந்த 10 நாட்களுக்கான 22 காரட் தங்கத்தின் விலை

தேதிகிராம் விலை (ரூ.)சவரன் விலை (ரூ.)
ஜனவரி 10ரூ.12,900ரூ.103,200
ஜனவரி 9ரூ.12,800ரூ.102,400
ஜனவரி 8ரூ.12,750ரூ.102,000
ஜனவரி 7ரூ.12,800ரூ.102,400
ஜனவரி 6ரூ.12,830ரூ. 102,640
ஜனவரி 5ரூ.12,760ரூ.1,02,080
ஜனவரி 4ரூ.12,600ரூ.100,800
ஜனவரி 3ரூ.12,600ரூ.100,800
ஜனவரி 2ரூ.12,580ரூ.100,640
ஜனவரி 1ரூ.12,440ரூ.99,520