மீண்டும் மளமளவென குறைந்த தங்கம் விலை: சவரன் விலை என்ன தெரியுமா?
வெள்ளி விலை இன்று (ஏப்.7) கிராமிற்கு ரூ.5 குறைந்து ரூ.255-க்கும், கிலோ ரூ.2,55,000-க்கும் விற்கப்படுகிறது.


Published : April 7, 2026 at 10:36 AM IST
சென்னை : 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.7) ரூ.1,040 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,10,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக தங்கத்தின் விலை தினசரி ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து, ஒரு கிராம் விலை ரூ.14 ஆயிரத்துக்குள் வந்தது. மேற்காசிய போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலரின் மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றால் தங்கம் விலை குறைந்து வந்தது.
அதே சமயத்தில், சமீபகாலமாக ஈரான் போர் பதற்றம் குறைந்ததால் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். இதன் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை எகிற தொடங்கியது. ஆனால், இப்போது மீண்டும் போர் தீவிரம் அடைய தொடங்கியிருப்பதால், தங்கத்தின் மீது செய்த முதலீட்டை முதலீட்டாளர்கள் எடுத்து வருகின்றனர். இதனால் மீண்டும் தங்கம் விலை சரிய தொடங்கி இருக்கிறது.
தங்கம் விலை
நேற்று (ஏப்ரல் 6) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,11,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.13,990-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஏப்.7) சவரனுக்கு ரூ.1,040 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,10,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் இன்று (ஏப்.7) கிராமிற்கு ரூ.5 குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.260-க்கும், கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமிற்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.5,000 குறைந்து ரூ.2,55,000 விற்பனை செய்யப்படுகிறது.
| இதையும் படிங்க : ஈரானில் சிக்கிய போர் விமானியை மீட்டது எப்படி? திக் திக் நிமிடங்களை பகிர்ந்த டிரம்ப்; மறுக்கும் ஈரான் |
தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 13,860
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,10,880
வெள்ளி 1 கிராம் - ரூ.255
வெள்ளி 1 கிலோ - ரூ.2,55,000
| தேதி | கிராம் விலை (ரூ.) | சவரன் விலை (ரூ.) |
|---|---|---|
| ஏப்ரல் 7 | ரூ.13,860 | ரூ.1,10,880 |
| ஏப்ரல் 6 | ரூ.13,990 | ரூ. 1,11,920 |
| ஏப்ரல் 4 | ரூ.13,950 | ரூ.1,11,600 |
| ஏப்ரல் 3 | ரூ.13,850 | ரூ.1,10,800 |
| ஏப்ரல் 2 | ரூ.13,750 | ரூ.1,10,000 |
| ஏப்ரல் 2 | ரூ. 13,950 | ரூ. 1,11,600 |
| ஏப்ரல் 1 | ரூ. 14,050 | ரூ. 1,12,400 |
| மார்ச் 31 | ரூ. 13,670 | ரூ. 1,09,360 |

