செப்டம்பர் முதல் நாளில் உயர்ந்த தங்கம் - சவரன் விலை எவ்வளவு?
இன்று வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Published : September 1, 2026 at 12:37 PM IST
சென்னை: மாதத்தின் முதல் நாளான இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 1,15,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலகளவில் அதிகமாக தங்கம் புழக்கத்தில் இருக்கிற நாடாக இந்தியா திகழ்கிறது. ஆனால் இங்கு 20 சதவீதம் தங்கம் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் நிலையில், 80 சதவீதம் பிற நாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனாலேயே மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிக அளவு தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
அமெரிக்க - ஈரான் போரின் தாக்கத்தால் கச்சா எண்ணெய் விலை உயரவே, சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்தது. இதனிடையே இந்தியாவும் கடந்த மே மாதத்தில் தங்கத்தின் மீதா சுங்க வரியை 6 லிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இதனாலும் இந்தியாவில் தங்கம் விலை குறைந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் தொடங்கியதிலிருந்து திடீர் ஏற்றம் கண்டது.
இந்த விலையேற்றம் மேலும் தொடருமா என வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலை எழுந்துவந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலை குறைந்து சற்று ஆறுதல் அளித்து வருகிறது.
தங்கம் விலை
மாத கடைசி நாளான நேற்று (ஆகஸ்ட் 31) கிராமுக்கு ரூ. 135 குறைந்து ரூ. 14,370க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 15 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,385க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 1,080 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,14,960க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 120 உயர்ந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,15,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 14,385
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,15,080
வெள்ளி ஒரு கிராம் - ரூ. 255
வெள்ளி ஒரு கிலோ - ரூ. 2,55,000
கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை
| தேதி | ஒரு கிராம் தங்கம் (ரூ.) | சவரன் விலை (ரூ.) |
| செப்டம்பர் 1 | ரூ. 14,385 | ரூ. 1,15,080 |
| ஆகஸ்ட் 31 | ரூ. 14,370 | ரூ. 1,14,960 |
| ஆகஸ்ட் 30 | ரூ. 14,505 | ரூ. 1,16,040 |
| ஆகஸ்ட் 29 | ரூ. 14,505 | ரூ. 1,16,040 |
| ஆகஸ்ட் 28 | ரூ. 14,800 | ரூ. 1,18,400 |
| ஆகஸ்ட் 27 | ரூ. 14,725 | ரூ. 1,17,800 |
| ஆகஸ்ட் 26 | ரூ. 15,010 | ரூ. 1,20,080 |
| ஆகஸ்ட் 25 | ரூ. 15,010 | ரூ. 1,20,080 |
| ஆகஸ்ட் 24 | ரூ. 15,030 | ரூ. 1,20,240 |
| ஆகஸ்ட் 23 | ரூ. 14,950 | ரூ. 1,19,600 |
வெள்ளி விலை
நேற்று வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 260க்கும், ஒரு கிலோ ரூ. 2,60,000க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ. 5 குறைந்திருக்கிறது. அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 255க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்து ரூ. 2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

