ரூ. 640 அதிகரித்த தங்கம் விலை - இன்று சவரன் விலை எவ்வளவு?
வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் அதிகரித்து ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.


Published : May 2, 2026 at 10:59 AM IST
சென்னை: 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 640 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தினந்தோறும் ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டு முழுக்க பெரும்பாலான நாட்களில் ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலையானது, கடந்த சில மாதங்களாக பெரும்பாலும் குறைவதும் அவ்வபோது அதிகரிப்பதுமாக இருக்கிறது.
பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்பட்டாலும், உலகளவிலான பொருளாதார நிச்சயமற்ற தன்மையை கருத்தில்கொண்டு, குறுகிய காலத்தில் அதிக லாபம் தரக்கூடிய முதலீடுகளின் பக்கமே பெரும்பாலான முதலீட்டாளர்கள் செல்கின்றனர்.
அதன்படி, தற்போது உலக சந்தையில் டாலர் மதிப்பு மிகவும் அதிகரித்துக் கொண்டே போவதால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன் காரணமாக, தங்கம் விலை பெரும்பாலான நாட்களில் குறைவதும், சில நேரங்களில் ஏறுவதுமாக இருக்கிறது.
தங்கம் விலை
நேற்று (மே 1) காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 14,050-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாலையில் மீண்டும் ரூ. 130 குறைந்து ரூ. 13,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ரூ. 80 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, நேற்று காலையில் ரூ. 400 குறைந்து ரூ. 1,12,400-க்கு விற்கப்பட்ட ஒரு சவரன், மாலையில் ரூ. 400 குறைந்து ரூ. 1,040 குறைந்து ரூ. 1,11,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ரூ. 640 அதிகரித்து ரூ. 1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
நேற்று கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 265-க்கு விற்கப்பட்ட வெள்ளியானது இன்று ரூ. 5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று கிலோவுக்கு ரூ. 5000 குறைந்த நிலையில், இன்று மீண்டும் ரூ. 5000 அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ.14,000
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ.1,12,000
வெள்ளி 1 கிராம் - ரு. 270
வெள்ளி 1 கிலோ - ரூ. 2,70,000
கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை
| தேதி | ஒரு கிராம் தங்கம் (ரூ.) | சவரன் விலை (ரூ.) |
| மே 2 | ரூ.14,000 | ரூ.1,12,000 |
| மே 1 | ரூ.13,920 | ரூ.1,11,360 |
| ஏப்ரல் 30 | ரூ.14,100 | ரூ.1,12,800 |
| ஏப்ரல் 29 | ரூ.13,900 | ரூ.1,11,200 |
| ஏப்ரல் 28 | ரூ.14,100 | ரூ.1,12,800 |
| ஏப்ரல் 27 | ரூ.14,230 | ரூ.1,13,840 |
| ஏப்ரல் 26 | ரூ.14,200 | ரூ.1,13,600 |
| ஏப்ரல் 25 | ரூ.14,200 | ரூ.1,13,600 |
| ஏப்ரல் 24 | ரூ.14,100 | ரூ.1,12,800 |
| ஏப்ரல் 23 | ரூ.14,160 | ரூ.1,13,280 |

