ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 2,720 அதிகரிப்பு
வெள்ளி விலை இன்று (ஏப்.8) கிராமிற்கு ரூ.10 அதிகரித்து ரூ.265-க்கும், கிலோ ரூ.2,65,000-க்கும் விற்கப்படுகிறது.


Published : April 8, 2026 at 11:02 AM IST
சென்னை: இன்று 22 காரட் தங்கம் விலை இன்று (ஏப்.8) ரூ.2,720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடுத்திருப்பதன் காரணமாக தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. அதுவரையில் கடுமையாக உயரந்து வந்த தங்கத்தின் விலை, இந்த போர் தொடங்கியதும் அப்படியே குறைய தொடங்கியது. பொதுவாக, இதுபோல போர் சூழல் ஏற்பட்டால் தங்கத்தின் விலை அதிகரிக்கவே செய்யும். ஆனால், மேற்காசிய போர் இதனை தலைகீழாக மாற்றியது.
இதற்கு காரணம் கச்சா எண்ணெய் விலை உயர்வுதான். போரின் விளைவாக ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்தது. இதனால் தங்கத்தின் மீதான தங்கள் முதலீட்டை திரும்பப் பெற்ற முதலீட்டாளர்கள், அதனை கச்சா எண்ணெய்யில் முதலீடு செய்தனர். இதுவே தங்கம் விலை குறைய காரணமாக இருந்தது.
இந்நிலையில், தற்போது ஈரான் - இஸ்ரேல் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதன் விளைவாக, தங்கத்தின் மீண்டும் முதலீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை சுமார் 14 டாலர்கள் குறைந்து, 95 டாலர்களாக வர்த்தகம் ஆகிறது. இந்த கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியே, தற்போது தங்கம் விலையில் பிரதிபலித்துள்ளது. இதன் காரணமாக இன்று தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
நேற்று (ஏப்ரல் 7) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,10,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல், கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,860-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று (ஏப்.8) சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கிராமுக்கு ரூ.340 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை போல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று (ஏப்.8) கிராமுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. நேற்று கிராமுக்கும் ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.5,000 குறைந்து ரூ.2,55,000 விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 14,200
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,13,600
வெள்ளி 1 கிராம் - ரூ.265
வெள்ளி 1 கிலோ - ரூ.2,65,000
| தேதி | கிராம் விலை (ரூ.) | சவரன் விலை (ரூ.) |
|---|---|---|
| ஏப்ரல் 8 | ரூ. 14,200 | ரூ. 1,13,600 |
| ஏப்ரல் 7 | ரூ.13,860 | ரூ.1,10,880 |
| ஏப்ரல் 6 | ரூ.13,990 | ரூ. 1,11,920 |
| ஏப்ரல் 4 | ரூ.13,950 | ரூ.1,11,600 |
| ஏப்ரல் 3 | ரூ.13,850 | ரூ.1,10,800 |
| ஏப்ரல் 2 | ரூ.13,750 | ரூ.1,10,000 |
| ஏப்ரல் 2 | ரூ. 13,950 | ரூ. 1,11,600 |
| ஏப்ரல் 1 | ரூ. 14,050 | ரூ. 1,12,400 |
| மார்ச் 31 | ரூ. 13,670 | ரூ. 1,09,360 |

