ETV Bharat / business

சரிவில் தங்கம் விலை - சவரனுக்கு ரூ. 1,280 குறைவு

வெள்ளி விலையானது இன்று ஒரு கிராம் ரூ. 250க்கும், ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 7, 2026 at 10:20 AM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 13,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த வாரம் முழுவதும் காலை, மாலை என இருவேளை அதிகரித்த நிலையில், இரண்டாவது நாளாக இன்று குறைந்திருக்கிறது. பொதுவாக டாலர் மதிப்பை பொறுத்து, முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் அதிக லாபத்தை ஈட்டத்தரும் பங்குச்சந்தை அல்லது பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிற தங்கத்தை தேர்ந்தெடுப்பர்.

ஆனால். தற்போது பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவி வருவதால், தங்கம் விலை திடீரென உயர்ந்தாலும், அவ்வபோது குறையும் என்கின்றனர். கடந்த ஒருசில மாதங்களில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சவரன் விலை குறைந்துள்ள நிலையில், இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சவரன் விலை ரூ. 1 லட்சத்துக்கும் கீழ் குறைவது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தங்கம் விலை

நேற்று (ஜூலை 6) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 140 குறைந்து ரூ. 13,560-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 160 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து ரூ. 1,08,480க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 1,280 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,07,200-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை

கடந்த ஜனவரி மாதத்தில் வெள்ளி விலையானது கிராம் ரூ. 400க்கும் மேல் விற்பனையானது. தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டதால் முதலீட்டாளர்கள் வெள்ளியையும் பாதுகாப்பான முதலீடாக தேர்ந்தெடுத்ததே இந்த விலையேற்றத்துக்கு காரணமாக பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களில் படிப்படியாக குறைந்துள்ளது.

அதன்படி, நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 250க்கு விற்பனையான நிலையில் இன்று விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகிறது. அதன்படி, இன்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: விலை குறையும் பெட்ரோல்-டீசல்; கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 13,400

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,07,200

வெள்ளி 1 கிராம் - ரூ. 250

வெள்ளி 1 கிலோ - ரூ. 2,50,000

கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை

தேதிஒரு கிராம் தங்கம் (ரூ.)சவரன் விலை (ரூ.)
ஜூலை 7ரூ. 13,400ரூ. 1,07,200
ஜூலை 6ரூ. 13,560ரூ. 1,08,480
ஜூலை 5ரூ. 13,700ரூ. 1,09,600
ஜூலை 4ரூ. 13,700ரூ. 1,09,600
ஜூலை 3ரூ. 13,700ரூ. 1,09,600
ஜூலை 2ரூ. 13,550ரூ. 1,08,400
ஜூலை 1ரூ. 13,250ரூ. 1,06,000
ஜூன் 30ரூ. 13,200ரூ. 1,05,600
ஜூன் 29ரூ. 13,300ரூ. 1,06,400
ஜூன் 28ரூ. 13,370ரூ. 1,06,960