ஒரு வார ஏற்றத்திற்கு பின் சற்று சரிந்த தங்கம் விலை - சவரனுக்கு ரூ. 1,120 குறைவு
வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ. 10 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.


Published : July 6, 2026 at 10:15 AM IST
சென்னை: 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான இன்று சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து ரூ. 1,08,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியர்களின் முக்கிய சேமிப்பு மற்றும் செல்வங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது தங்கம். இது மட்டுமல்லாமல், முக்கிய நிகழ்வுகளிலும் தங்கம் பிரதானமாக இடம் பெறுவதால் மற்ற நாடுகளை காட்டிலும் நமது நாட்டில் தங்கத்தின் மீதான மோகமும், மதிப்பும் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. ஆனால், நமது நாட்டில் புழக்கத்தில் இருக்கிற தங்கத்தின் வெறும் 20% தங்கம் மட்டுமே இங்கு உற்பத்தி செய்யப்படுகிற நிலையில், மற்ற 80% வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதன் காரணமாக, உலகளவில் அமெரிக்க டாலரில் வர்த்தகமாகிற தங்கம் விலையானது டாலர் மதிப்பு மாறுவதை பொறுத்து தினந்தோறும் மாறுபடுகிறது. அதாவது அமெரிக்க வட்டி விகிதம் மாறும் போது தங்கம் விலையும் மாறுகிறது. இதனால் வரும் நாட்களில் தங்கம் விலை குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை
கடந்த 2 நாட்களாக தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று குறைந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை (ஜூலை 3) கிராமுக்கு ரூ. 150 உயர்ந்து ரூ. 13,700-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஜூலை 3 அன்று சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்து ரூ. 1,09,600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 1,120 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,08,480-க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தை போன்றே வெள்ளி விலையும் தினசரி மாறி வரும் நிலையில், ஜூலை 3 அன்று கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ. 260க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் ரூ. 10 குறைந்து ரூ. 250க்கு விற்கப்படுகிறது. அதன்படி, இன்று கிலோவுக்கு ரூ. 10,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
| இதையும் படிங்க: கரிவலம்வந்தநல்லூரில் சங்க காலக் கிணறு - தென்காசி தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு |
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 13,560
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,08,480
வெள்ளி 1 கிராம் - ரூ. 250
வெள்ளி 1 கிலோ - ரூ. 2,50,000
கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை
| தேதி | ஒரு கிராம் தங்கம் (ரூ.) | சவரன் விலை (ரூ.) |
| ஜூலை 6 | ரூ. 13,560 | ரூ. 1,08,480 |
| ஜூலை 5 | ரூ. 13,700 | ரூ. 1,09,600 |
| ஜூலை 4 | ரூ. 13,700 | ரூ. 1,09,600 |
| ஜூலை 3 | ரூ. 13,700 | ரூ. 1,09,600 |
| ஜூலை 2 | ரூ. 13,550 | ரூ. 1,08,400 |
| ஜூலை 1 | ரூ. 13,250 | ரூ. 1,06,000 |
| ஜூன் 30 | ரூ. 13,200 | ரூ. 1,05,600 |
| ஜூன் 29 | ரூ. 13,300 | ரூ. 1,06,400 |
| ஜூன் 28 | ரூ. 13,370 | ரூ. 1,06,960 |
| ஜூன் 27 | ரூ. 13,370 | ரூ. 1,06,960 |

