தடாலடி உயர்வுக்கு பிறகு சற்று குறைந்த தங்கம் விலை - சவரன் ரூ.1,25,280க்கு விற்பனை
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 10 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 3 லட்சத்து 15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Published : March 2, 2026 at 11:39 AM IST
சென்னை: 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 920 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,25,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரு நாட்களாக ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரசரவென ஏறியது.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமையில் இந்திய பங்கு சந்தைகள் செயல்படாது. அதனால் அன்றைய தினம் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இருக்காது. ஆனால் தற்போது ஈரான் மீதான தாக்குதல், முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அதிக லாபம் தரும் பங்குச்சந்தையிலிருந்து பாதுகாப்பான முதலீட்டுக்கு பலர் திரும்புவதன் எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் (மார்.1) தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருந்தது. போர் முடிவுக்கு வரும் வரை தங்கம் விலையில் தொடர் ஏற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று எதிர்பாராதவிதமாக விலை சற்று குறைந்துள்ளது.
தங்கம் விலை
நேற்று முன்தினம் (பிப். 28) ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்துக்கு 550-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய (மார்.1) நிலவரப்படி, கிராமுக்கு ரூ.225-ம், சவரனுக்கு ரூ.1,800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 775-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1,25,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.15,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.315-க்கும், கிலோவுக்கு ரூ. 10 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 15,660
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,25,280
வெள்ளி 1 கிராம் - ரூ. 315
வெள்ளி 1 கிலோ - ரூ. 3,15,000
கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை
| தேதி | கிராம் விலை (ரூ.) | சவரன் விலை (ரூ.) |
|---|---|---|
| மார்ச் 2 | ரூ.15,660 | ரூ.1,25,280 |
| மார்ச் 1 | ரூ.15,775 | ரூ.1,26,200 |
| பிப்ரவரி 28 | ரூ.15,550 | ரூ.1,24,400 |
| பிப்ரவரி 27 | ரூ.14,900 | ரூ.1,19,200 |
| பிப்ரவரி 26 | ரூ.14,920 | ரூ.1,19,360 |
| பிப்ரவரி 25 | ரூ.14,930 | ரூ.1,19,440 |
| பிப்ரவரி 24 | ரூ.14,890 | ரூ.1,19,120 |
| பிப்ரவரி 23 | ரூ.14,860 | ரூ.1,18,880 |
| பிப்ரவரி 22 | ரூ.14,680 | ரூ.1,17,440 |
| பிப்ரவரி 21 | ரூ.14,680 | ரூ.1,17,440 |

