நுகர்வோர் மனதை தித்திப்பாக்கிய தங்கம் விலை - ஒரே நாளில் ரூ. 2,360 குறைந்து விற்பனை
இன்று வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Published : August 29, 2026 at 11:09 AM IST
சென்னை: ஆபரண தங்கம் 22 காரட்டின் விலை இன்று சவரனுக்கு ரூ. 2,360 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,16,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கணிக்கமுடியாத வகையில் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிவை நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென இந்த மாத தொடக்கத்திலிருந்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் இனிமேல் தங்கம் விலை ஏறுமுகத்தில் தான் இருக்குமா? அல்லது குறைய வாய்ப்பிருக்கிறதா? என்ற குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்தது.
தங்கம் விலையானது அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்தை பொறுத்து பெரும்பாலும் ஏற்ற இறக்கத்தை சந்திக்கும். அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருப்பதாலும், வேலை வாய்ப்பின்மையாலும் தற்போதைக்கு வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகின. இதனால் அமெரிக்க - ஈரான் போருக்கு பிறகும் தங்கம் விலை சரிவை நோக்கியே சென்றுகொண்டிருந்தது.
வரும் நாட்களில் ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்துக்கும் கீழே குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தான் திடீரென ஏற்றம் கண்டது. ஒரு சவரன் ரூ. 1.20 லட்சத்தை தொட்ட நிலையில் கடந்த சில நாட்களாக மடமடவென குறைந்து வருகிறது.
தங்கம் விலை
நேற்று (ஆகஸ்ட் 28) காலை கிராமுக்கு ரூ. காலை ரூ. 75 குறைந்து மாலை ரூ. 150 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 14,800-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 295 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,505க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, நேற்று காலை ரூ. 600 குறைந்து, மாலை ரூ. 1,200 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 1,18,400-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 2,360 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,16,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 14,505
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,16,040
வெள்ளி ஒரு கிராம் - ரூ. 260
வெள்ளி ஒரு கிலோ - ரூ. 2,60,000
கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை
| தேதி | ஒரு கிராம் தங்கம் (ரூ.) | சவரன் விலை (ரூ.) |
| ஆகஸ்ட் 29 | ரூ. 14,505 | ரூ. 1,16,040 |
| ஆகஸ்ட் 28 | ரூ. 14,800 | ரூ. 1,18,400 |
| ஆகஸ்ட் 27 | ரூ. 14,725 | ரூ. 1,17,800 |
| ஆகஸ்ட் 26 | ரூ. 15,010 | ரூ. 1,20,080 |
| ஆகஸ்ட் 25 | ரூ. 15,010 | ரூ. 1,20,080 |
| ஆகஸ்ட் 24 | ரூ. 15,030 | ரூ. 1,20,240 |
| ஆகஸ்ட் 23 | ரூ. 14,950 | ரூ. 1,19,600 |
| ஆகஸ்ட் 22 | ரூ. 14,950 | ரூ. 1,19,600 |
| ஆகஸ்ட் 21 | ரூ.14,850 | ரூ. 1,17,800 |
| ஆகஸ்ட் 20 | ரூ. 14,600 | ரூ. 1,16,800 |
வெள்ளி விலை
வெள்ளி விலையும் தங்கத்தைப் போன்றே தினசரி மாற்றம் கண்டு வருகிறது. இன்று கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 260-க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்து ரூ. 2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

