ETV Bharat / business

2-வது நாளாக குறைந்த தங்கம் விலை - சவரனுக்கு ரூ. 640 குறைவு

வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ. 5000 குறைந்து ரூ. 2 லட்சத்து 90 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (IANS/Deepak Kumar)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2026 at 10:39 AM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 640 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,17,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையேயான போருக்கு முன்பே தங்கம் விலை தாறுமாறான மாற்றத்தை கண்டு வந்தது. கடந்த ஆண்டில் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்த நிலையில், ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் ரூ. 1 லட்சத்தை தாண்டியது. இந்த விலை உயர்வும் இனி வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், 2026ஆம் ஆண்டு பாதிக்குள் ஒரு சவரன் ரூ. 2 லட்சத்தை தொடும் என்றும் கூறியிருந்தனர்.

அதற்கேற்றாற்போல், இந்த ஆண்டு தொடக்கத்தில் மடமடவென உயரந்த தங்கம் விலையானது, பிப்ரவரி மாத கடைசியிலிருந்து தலைகீழாக மாறியிருக்கிறது. பொதுவாக போர்க்காலங்களில் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையை தவிர்த்து பாதுகாப்பான முதலீடான தங்கத்தை தேர்ந்தெடுப்பர். ஆனால் ஈரான் போரின் காரணமாக முதலீட்டாளர்கள் எதன் மீதும் முதலீடு செய்யாமல் தவிர்த்தனர். இதனால் தங்கம் விலை குறைய ஆரம்பித்து, தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக விலை சரிவு தொடர்ந்து வருகிறது.

தங்கம் விலை

22 காரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று (மே 26) கிராமுக்கு ரூ. 50 குறைந்து, ரூ. 14,730க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 80 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,17,840க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 640 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கடந்த வாரத்தில் பெரும்பாலும் மாற்றமின்றி விற்பனையானது. மே 22ஆம் தேதியிலிருந்து ஒரு கிராம் ரூ. 295க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 5 குறைந்து ரூ. 290க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இன்று கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்து ஒரு கிலோ ரூ. 2,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ராஜினாமா செய்துவிட்டு வரும் எம்.எல்.ஏக்களை சேர்த்துக்கொண்டால் அவப்பெயர் உண்டாகும் - தவெகவிற்கு திருவாளவன் அறிவுரை

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 14,650

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,17,200

வெள்ளி 1 கிராம் - ரூ. 290

வெள்ளி 1 கிலோ - ரூ. 2,90,000

கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை

தேதிஒரு கிராம் தங்கம் (ரூ.)சவரன் விலை (ரூ.)
மே 27ரூ. 14,650ரூ. 1,17,200
மே 26ரூ. 14,730ரூ. 1,17,840
மே 25ரூ. 14,780ரூ. 1,18,240
மே 24ரூ. 14,730ரூ. 1,17,840
மே 23ரூ. 14,730ரூ. 1,17,840
மே 22ரூ. 14,780ரூ. 1,18,240
மே 21ரூ. 14,810ரூ. 1,18,480
மே 20ரூ. 14,750ரூ. 1,18,000
மே 19ரூ. 14,870ரூ. 1,18,960
மே 18ரூ. 14,750ரூ. 1,18,000