வாரத்தின் முதல் நாளில் காலை, மாலை என இருமுறை குறைந்த தங்கம் விலை - இன்று சவரன் எவ்வளவு?
வெள்ளி விலை இன்று ஒரு கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Published : October 12, 2026 at 10:30 AM IST
சென்னை: ஆபரண தங்கம் 22 காரட்டின் விலை வாரத்தின் முதல் நாளான இன்று காலை, மாலை என இரு வேளை குறைந்து ஒரு சவரன் ரூ. ரூ. 1,09,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தினந்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதற்கு உலகளாவிய நிச்சயமற்ற தன்மை, போர் பதற்றங்கள், அமெரிக்க டாலர் மதிப்பு வலுவிழத்தல் போன்ற பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, உலக நாடுகளிடையேயான போர் பதற்றம் காரணமாக பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிற தங்கத்தை பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் பெருமளவில் வாங்கி சேமித்து வருகின்றன.
இதன் காரணமாக, அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய போதிலும் தங்கம் விலை குறையாமல் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. அவ்வபோது குறைந்து நகைப் பிரியர்களுக்கு சற்று அளித்தாலும் இனிவரும் காலங்களில் விலை ஏற்றம் இருக்கத்தான் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள்.
தங்கம் விலை
சனிக்கிழமை (அக்டோபர் 10) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 65 அதிகரித்து ரூ. 13,880-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை ரூ. 40, மாலை ரூ. 120 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
| இதையும் படிங்க: அட்டைப்பெட்டியை நம்பி தொழில் செய்பவரா நீங்கள்; விலை உயர்வை சந்திக்க தயாராக இருங்கள்! |
அதன்படி, சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 520 அதிகரித்து ரூ. 1,11,040-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை ரூ. 320, மாலை ரூ. 920 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,09,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று (அக்டோபர் 12) திங்கட்கிழமை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் #goldrate | #goldprice| #silverrate | #goldsilverrate | #goldrateupdate | #EtvBharatTamilNadu https://t.co/ZbibZDR0BE
— ETV Bharat Tamil Nadu (@ETVBharatTN) October 12, 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 13,720
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,09,760
வெள்ளி ஒரு கிராம் - ரூ. 245
வெள்ளி ஒரு கிலோ - ரூ. 2,45,000
கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை
| தேதி | ஒரு கிராம் தங்கம் (ரூ.) | சவரன் விலை (ரூ.) |
| அக்டோபர் 10 | ரூ. 13,720 | ரூ. 1,09,760 |
| அக்டோபர் 11 | ரூ. 13,880 | ரூ. 1,11,040 |
| அக்டோபர் 10 | ரூ. 13,880 | ரூ. 1,11,040 |
| அக்டோபர் 9 | ரூ. 13,815 | ரூ. 1,10,520 |
| அக்டோபர் 8 | ரூ. 13,710 | ரூ. 1,09,680 |
| அக்டோபர் 7 | ரூ. 13,710 | ரூ. 1,09,680 |
| அக்டோபர் 6 | ரூ. 13,660 | ரூ. 1,09,280 |
| அக்டோபர் 5 | ரூ. 13,675 | ரூ. 1,09,400 |
| அக்டோபர் 4 | ரூ. 13,675 | ரூ. 1,09,400 |
| அக்டோபர் 3 | ரூ. 13,675 | ரூ. 1,09,400 |
வெள்ளி விலை
தங்கம் விலை தினந்தோறும் மாறி வந்தாலும், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. இன்றும் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ ரூ. 2,45,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

